சென்னை: முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஜிம்கான கிளப்பில் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி தினகரன் பேசினார்.
அதில், "ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா 3 பேர் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என ஜெயக்குமார் கூறியது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த டிடிவி தினகரன், “எங்கள் மூன்று பேரிடம் மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். எங்கள் 3 பேருக்கும் துரோகம், தவறு செய்தவர்கள் அவர்கள்தான். மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர் எங்கள் 3 பேருக்கு மட்டும் விதிவிலக்கு என சரியாகத்தான் சொல்லியுள்ளார். எங்கள் 3 பேரிடமும் கடிதம் கேட்கவில்லை என உண்மையைச் சொல்லியுள்ளார்.
இதையும் படிங்க: தஞ்சையில் தொடங்கியது புத்தகத் திருவிழா: சிறைவாசிகளுக்கு புத்தகம் தானம் செய்ய பிரத்யேக அரங்கம்!
திமுக பைல்ஸ் 2க்கு ஆர்வமாக இருக்கிறேன். அது வந்த பிறகு அதைப் பற்றி பேசுவோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி கூட்டணியில் போட்டியிட வேண்டும் என்பதுதான் அமமுகவின் நிலைப்பட்டாக இருக்கிறது. கூட்டணி இல்லை என்றாலும் கடந்த தேர்தலைப் போல தனித்தும் கூட போட்டியிடுவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்த பிறகு அதைப்பற்றிப் பேசுவோம்.
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடக்கும் போது ஓ.பி.எஸ் துணை முதலமைச்சராக இருந்தவர். அதனால் அவருக்கு சில உண்மைகள் தெரிந்து இருக்கலாம். அதை திமுக அரசு கண்டறிய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்துவதில் தவறில்லை என நினைக்கிறேன். அம்மாவின் ஆட்சி கலைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அப்போது அவர்களுக்கு ஆதரவளித்தேன் என்றும் ஓ.பி.எஸ் கூறியுள்ளார்” எனக் கூறினார்.
முன்னதாக, அதிமுக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர்கள் பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து இணைந்து கொல்லலாம் என அதிமுக சார்பில் கடந்த ஜூலை 11ம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்த மன்னிப்பு கடிதம் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆஅகியோருக்கு பொருந்துமா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மூன்று பேருக்கும் பொருந்தாது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போலீசார் முன்பு பத்திரிக்கையாளர்களுக்கு கெத்தாக போஸ் கொடுத்த திருடர்கள்; பழனியில் அதிர்ச்சி!!