ETV Bharat / state

புதிய வாக்காளர் சேர்ப்புப் பணி: அமமுகவினருக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்

author img

By

Published : Nov 16, 2020, 5:38 PM IST

சென்னை: வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு - புதிய வாக்காளர் சேர்ப்புப் பணிகளில் முழுமையாக ஈடுபடவேண்டும் என அமமுகவினருக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

TTV
TTV

தமிழ்நாடு முழுவதும் இன்று (நவ. 16) 2021ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள் மூலமாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுவருகிறது.

இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு-புதிய வாக்காளர் சேர்ப்புப் பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதுடன் அதன் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் கழகத்தினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு முழுவதற்குமான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கழகத்தினர் தாமதமின்றி முறைப்படி பெற்று அதனை வாக்குச்சாவடி வாரியாகச் சரிபார்க்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றைத் தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிற வழிகாட்டுதலின்படி செயல்படுத்திட வேண்டும்.

  • வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் புதிய வாக்காளர் சேர்ப்புப் பணிகளில் முழுமையாக ஈடுபடவேண்டும்:
    கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்! pic.twitter.com/1PtzzGEeJu

    — TTV Dhinakaran (@TTVDhinakaran) November 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் இதன் தொடர்ச்சியாக கோரிக்கை - மறுப்புரைகள் விண்ணப்பிக்க 21/11/2020, 22/11/2020, 12/12/2020, 13/12/2020 ஆகிய நாள்களில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்நாள்களில் கழகத்தினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு தேவையான கரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளுடன் புதிய வாக்காளர்களைச் சேர்த்திட வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பினை சரியாகவும் அக்கறையோடும் பயன்படுத்திக்கொண்டு அந்தந்த மாவட்டத்திற்குள்பட்ட பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், கிளை வார்டு உள்ளிட்ட கழக பகுதிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு கழக உடன்பிறப்பும் தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள வாக்காளர்களைச் சேர்ப்பத்தில் ஆர்வத்துடன் செயல்பட வேண்டும். மிக முக்கியமான இந்தப் பணியை அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட கழக செயலாளர்கள் முழு வீச்சில் ஒருங்கிணைக்க வேண்டுமன்று கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.