ETV Bharat / state

மீண்டும் இணையும் ரஜினி-அமிதாப் கூட்டணி? - thalaivar rajini

பாலிவுட் சூப்பர் ஸ்டார் மற்றும் கோலிவுட் சூப்பர் ஸ்டார் இணையும் படத்தை இயக்குகிறார் ஜெய்பீம் பட இயக்குநர் த.செ ஞானவேல்.

மீண்டும் இனையும் ரஜினி அமிதாப் கூட்டனி
மீண்டும் இனையும் ரஜினி அமிதாப் கூட்டனி
author img

By

Published : Jun 10, 2023, 1:28 PM IST

Updated : Jun 10, 2023, 2:53 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் ரஜினியின் ஜெய்லர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ரஜினியின் 170வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இது ஜெய்பீம் பட இயக்குநர் த.செ ஞானவேல் இயக்க உள்ளதாகக் கூறப்பட்டு 2024ல் வெளியாக உள்ளது என்னும் செய்தி இணையத்தில் பரவி உள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த், இவரது படங்கள் வெளியாகும் நாளில் திரையரங்குகளில் திருவிழா போல ரசிகர்கள் கூட்டம் படத்தைக் கொண்டாடுவார்கள்.தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் படம் 2023 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இயக்குநர் நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் மூலம் வெற்றி இயக்குநராக வலம் வந்தார். இவரது படங்களில் வரும் டார்க் காமெடி மிகவும் ரசிக்கும் படியாகவும் தனித்துவம் மிக்கதாகவும் இருக்கும்.

இதனால், விஜய்யை வைத்து 'பீஸ்ட்' என்ற திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார், நெல்சன். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பீஸ்ட் படத்தின் சமயத்திலேயே ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பு பெற்ற இவர் ஜெயிலர் என்னும் படத்தை இயக்கியுள்ளார். ஜெயிலர் திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது.

ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள 'ஜெயிலர்' (Jailer) படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். அதிக பொருட்செலவில் தயாராகும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, நெய்வேலி, ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மாபெரும் பொருட்செலவில் நடைபெற்று வந்தது. ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்த ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் 'முத்துவேல் பாண்டியன்' என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இதில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது.

இந்த படத்தை அடுத்து ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.ரஜினியின் 170வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.‌ இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும், இப்படம் ஜெய்பீம் படத்தைப் போலவே சமூக சிந்தனையுள்ள படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இன்னொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரஜினியின் 170வது படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதாகவும்,அமிதாப் படத்தில் நடக்க சம்மதம் சொல்லிவிட்டதாகத் தகவல் பரவப்படுகிறது. அப்படி நடந்தால் அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம் இதுவாகும். இந்தியில் 1991-ம் ஆண்டு வெளியான 'ஹும்' (HUM) படத்திற்குப் பிறகு இருவரும் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் சேர்ந்து நடிக்கும் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நிதி மோசடியில் ஈடுபட்ட ஏஆர்டி நகைக்கடை உரிமையாளர்கள் கைது

Last Updated : Jun 10, 2023, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.