ஒரு வாகனம் விபத்துக்கு உள்ளானால், விபத்து ஏற்படுத்திய வாகனத்தால் பாதிக்கப்படும் நபருக்கு இழப்பீடு வழங்குவதற்காக அனைத்து வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், பலர் வாகன காப்பீட்டை புதுப்பிப்பதில்லை. அவ்வாறு காப்பீடு இல்லாத வாகனங்கள் விபத்தை ஏற்படுத்தும் போது, பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டு வந்தன.
விபத்தில் பாதிக்கப்பட்டவர் உடனடியாக இழப்பீடு பெரும் வகையில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், விபத்து ஏற்படுத்திய வாகனம் மூன்றாம் நபர் காப்பீடு சட்டத்தின் கீழ் வராத பட்சத்தில், விபத்துக்கு உரிய இழப்பீடு தொகையை உரிமையாளர் செலுத்தும் வரை, வாகனத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது எனவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், விபத்து நடந்த 15 நாட்களுக்குள் இழப்பீட்டு தொகையை அளிக்காவிட்டால், வாகனத்தை கைப்பற்றிய மூன்று மாதங்களுக்குள் அதை விற்கலாம் எனவும் விபத்துக்கான இழப்பீட்டுத் தொகையை உரிமையாளரிடம் இருந்து பெறுவதற்காக, விற்ற பணத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று திருத்தம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுவுள்ளது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் போட்டி - ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு