சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் கணபதி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சரஸ்வதி. இந்நிலையில் நேற்று மாலை அடையாளம் தெரியாத நபர் இவரது வீட்டிற்கு வந்து உங்களது கணவருக்கு ரயில்வேயிலிருந்து ஐந்து ஆயிரம் ரூபாய் பணம் வந்திருப்பதாகவும், தான் ரயில்வே ஊழியர் எனவும் கூறியுள்ளார்.
அந்த நபரிடம் சரஸ்வதி, நீ யார்? எங்கிருந்து வருகிறாய் என வீட்டின் உள்புறமாக நின்றபடி விசாரித்துள்ளார். அப்போது, அந்த நபர் திடீரென்று அவரின் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்கச் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது கொள்ளையன் தயாராக இருந்த இருவருடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமரா உள்ளதா என்பதை ஆய்வு செய்தபோது அந்தப் பகுதியில் எங்கும் கண்காணிப்பு கேமரா இல்லை.
இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீடு புகுந்து தங்க தாலி சங்கிலியை பறித்துச் சென்றது தெரியவந்தது. மேலும் பட்டப்பகலில் மூதாட்டியின் கழுத்தில் 7 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கொழும்பிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 67 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!