சென்னை: 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று (மார்ச். 18) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாயகராஜன் காகிதமற்ற பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர், தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்திடவும், பகுத்தறிவை பரப்பிடவும், பெண் அடிமைத்தனத்தை ஒழித்திடவும் தம் கடைசி மூச்சு இருக்கும் வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார்.
அவரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் பதிப்பிட 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்