சென்னை: 2015ஆம் ஆண்டு முதல் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு, மத்திய அரசு கோரிய மொத்த தொகையான ரூ.1,27,655.80 கோடியாகும்.
இதற்கு மொத்தமாக மத்திய அரசால் ரூ.5,884.49 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிய தொகையில் 4.61 சதவீதம் மட்டுமே ஆகும்.
2015ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை மத்திய அரசிடம் இயற்கை பேரிடர் காரணமாக கோரப்பட்ட தொகை மற்றும் மத்திய அரசால் விடுவிக்கப்பட்ட தொகை விபரம்:
வருடம் | இயற்கை பேரிடர் | மத்திய அரசிடம் கோரப்பட்ட தொகை (ரூ.கோடியில்) | மத்திய அரசு வழங்கிய தொகை (ரூ.கோடியில்) | ||
தற்காலிகாக நிவாரணம் | நீண்ட கால சீரமைப்பு | மொத்தம் | |||
2015-16 | வெள்ளம் | 7959.93 | 17952.52 | 25912.45 | 1737.65 |
2016-17 | வறட்சி | - | - | 39565.00 | 1748.28 |
2016-17 | வார்தா புயல் | 1972.89 | 20600.37 | 22573.26 | 266.17 |
2017-18 | கனமழை | 876.00 | 8426.00 | 9302.00 | 133.00 |
ஒகி புயல் | |||||
2018-19 | கஜா புயல் | 2709.00 | 15190.17 | 17899.17 | 1146.12 |
2020-21 | நிவர் புயல் | 650.10 | 3108.55 | 3758.65 | 63.14 |
புரெவி புயல் | 485.00 | 1029.00 | 1514.00 | 223.77 | |
ஜனவரி 2021 – கனமழை | 734.49 | 166.33 | 900.82 | 213.51 | |
2021-22 | கன மழை மற்றும் வெள்ளம் | ||||
முன்மொழிவு 1 | 549.63 | 2079.66 | 2629.29 | 352.85 | |
முன்மொழிவு 2 | 521.29 | 1475.21 | 1996.50 | ||
முன்மொழிவு 3 | 439.91 | 1164.75 | 1604.66 | ||
மொத்தம் | 16898.24 | 71192.56 | 127655.80 | 5884.49 |
பேரிடர்களின்போது மாநில பேரிடர் நிவாரண நிதியில் (SDRF) மத்திய மற்றும் மாநில அரசு ஒதுக்கீடு செய்யும் விழுக்காடு எவ்வளவு?
மத்திய அரசின் நிதிக்குழுவின் பரிந்துரையின்படி, மாநிலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் (SDRF) கீழ் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் தொகையில், மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பங்கு 75 சதவீதம் மற்றும் 25 சதவீதம் ஆகும்.
இந்த மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் நிர்ணயிக்கப்ட்ட தொகையில் 75 சதவீதம், மத்திய அரசு இரண்டு தவணைகளில் வழங்குகிறது. மத்திய அரசிடமிருந்து மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் 75 சதவீத பங்கு வரப்பெற்ற உடன், மாநில அரசு தனது பங்கான 25 சதவீதத்தை சேர்த்து, மாநிலப் பேரிடர் நிவாரண நிதிக்கு ஒதுக்கீடு செய்கிறது.
தேசிய பேரிடர் நிவாரண நிதி எப்போது ஒதுக்கீடு செய்யப்படும் (NDRF): மாநிலங்களில் ஏற்படும் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க மாநில பேரிடர் நிவாரண நிதி போதுமானதாக இல்லாத நிலையில், தேசியப் பேரிடர் நிவாரண நிதியியிலிருந்து (NDRF) நிதி ஒதுக்கீடு செய்ய, மத்திய அரசுக்கு மாநில அரசால் கோரிக்கை அளிக்கப்படுகிறது.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு, மாநில அரசுக்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) நிதி ஒதுக்கீடு செய்கிறது. அவ்வாறு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) மாநில அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகை முழுவதும் மத்திய அரசைச் சார்ந்தது ஆகும். இதில், மாநில அரசின் பங்கு ஏதும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழக மழை வெள்ள பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்