சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 5) முதல் வழிபாட்டுத் தலங்கள் பக்கதர்கள் வழிபாட்டிற்காக திறக்கப்படுகின்றன. கரோனா பெருந்தொற்றின் 2ஆவது அலை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால், ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, 80 நாள்களுக்குப்பின் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி தந்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அறநிலையத்துறை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: மேகதாது அணை திட்டம்: கர்நாடக முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!