ETV Bharat / state

அச்சத்தில் ஆசிரியர்கள்... தேசிய வரைவு உயர்கல்வித்தகுதிகள் திட்டத்தை திரும்பப்பெற கோரிக்கை - அச்சத்தில் ஆசிரியர்கள்

தேசியக்கல்வி கொள்கை 2020 வரைவு, உயர்கல்வித் தகுதிகள் கட்டமைப்பு, கல்வித்திட்ட கிரெடிட் வங்கித்திட்டம் ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டுமென அகில இந்திய கல்விப் பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஜவகர் நேசன் பேட்டி
ஜவகர் நேசன் பேட்டி
author img

By

Published : Mar 9, 2022, 4:15 PM IST

Updated : Mar 9, 2022, 5:48 PM IST

சென்னை: இதுகுறித்து அகில இந்திய கல்விப் பாதுகாப்பு சங்கத்தின் முன்னாள் துணைவேந்தரும் நீட் தேர்வு தாக்கம் குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் உறுப்பினருமான ஜவகர்நேசன் கூறும்போது, "உலகம் முழுவதும் நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ இந்திய அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு சர்ச்சைகள் உள்ளன.

ஏபிசி முறை

இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் வரைவு உயர்கல்வித் தகுதி கட்டமைப்பினை அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் தாம் பயிலும் பல்கலைக்கழகத்திற்கு வெளியே எந்தப் பல்கலைக்கழகத்திலும் படிப்பதற்கு வழிவகுக்கும். மேலும் 70 விழுக்காடு பாடங்களை ஆன்லைன் மூலமாகப் படிக்க ஏபிசி முறையானது ஊக்குவிக்கும்.

அச்சத்தில் ஆசிரியர்கள்

ஜவகர் நேசன் பேட்டி

இந்தத் திட்டத்தின் மூலம் பல்கலைக்கழக கட்டமைப்பு சிதைந்துவிடும் என்ற அச்சத்தில் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள் அஞ்சுகின்றனர்.

பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள வரை உயர்கல்வி அறிவிப்பில் நான்காண்டு பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு முடிந்தால் சான்றிதழ், இரண்டாம் ஆண்டில் டிப்ளமோ பட்டம், மூன்றாம் ஆண்டிலும் பட்டப்படிப்பு, நான்காம் ஆண்டில் ஹானர்ஸ் பட்டத்துடன் வெளியேற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த வரைவுக் கொள்கையை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரஜினிக்கு முதன்முதலாக மன்றம் அமைத்த ரசிகர் காலமானார்

Last Updated : Mar 9, 2022, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.