ETV Bharat / state

சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை: சிபிசிஐடி விசாரணை கோரும் மாதர் சங்கம் - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை ஐஐடியில் படித்து வரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவி, உடன் பயிலும் மாணவர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறப்படும் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி மாணவிக்கு தொடர் பாலியல் சீண்டல்

author img

By

Published : Mar 26, 2022, 4:37 PM IST

Updated : Mar 26, 2022, 5:47 PM IST

சென்னை: சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி பட்ட படிப்பு படித்துவரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவி, உடன் பயிலும் மாணவர்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இன்று (மார்ச் 26) செய்தியாளர்களைச் சந்தித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பொதுச்செயலாளர் சுகந்தி, "சென்னை ஐஐடியில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 2017ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி பட்ட படிப்பு படித்துவருகிறார். இவர் தன்னுடன் பயிலும் சக மாணவர்கள் 4 பேரால் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சாதிரீதியாக இழவுபடுத்திய பேராசிரியர்: இந்த விவகாரம் குறித்து மாணவி பேராசிரியரிடம் புகார் அளித்தபோது, மாணவியை சாதிரீதியாக இழவுபடுத்தி, குற்றம்புரிந்தவர்களை பாதுகாக்கும் நோக்குடன் இந்த விவகாரத்தை அணுகி உள்ளார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

மேலும் இந்தப் பிரச்சினை குறித்து மாணவி, ஐஐடி வளாகத்திலுள்ள உள்புகார் கமிட்டியில் 2020ஆம் ஆண்டு புகார் மனு அளித்தும், ஐஐடி நிறுவனம் மூலம் எந்த சீரான நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட பெண் பெரும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

அதேபோல் இந்தப் பிரச்சினை குறித்து 2021 மார்ச் மாதம் தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தமிழக காவல்துறையினரிடம் புகார் அளித்தும் தற்போது வரை எந்த ஒரு பெரிய நடவடிக்கையும் எடுக்காமல், தொடர்ந்து மாணவியை இழுத்தடித்து வருகின்றனர்.

சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்: மேலும் ஐஐடி நிறுவனத்தின் உள்புகார் கமிட்டி, விவகாரம் தொடர்பாக இடைக்கால அறிக்கையை கூறியுள்ள நிலையில் முழு விசாரணையை மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் தற்போது வரை முழு விசாரணை நடத்தப்படவில்லை. எனவே ஐஐடியின் உள்புகார் கமிட்டி ஒரு மாதத்திற்குள் விசாரணை மேற்கொண்டு முழு அறிக்கையை சமர்ப்பித்து, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

மேலும் மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்திற்கு கீழ்வரும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். உடனடியாக இந்த வழக்கை விசாரித்து சுதந்திரமாக சுற்றித்திரியும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். பெண்ணிற்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக சுகந்தி வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் மது அருந்திய பள்ளி மாணவிகளுக்கு மனநல ஆலோசனை - அமைச்சர் அன்பில் மகேஷ்

Last Updated : Mar 26, 2022, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.