சென்னை: அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வில் எம்பிபிஎஸ் படிப்பில் அனைத்து இடங்களும் நிரம்பின. ஆனால் பிடிஎஸ் படிப்பில் 921 இடங்கள் காலியாக இருக்கின்றன.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு இன்றுடன் (டிசம்பர் 14) நிறைவு பெற்றுள்ளது. முதல் கட்ட கலந்தாய்வில் இறுதி நாளான டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்விற்கு 358 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில், 283 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். 75 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 90 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரியில் 42 இடங்கள், பிடிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 6 இடங்கள் என 138 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். 144 மாணவர்கள் தங்களுக்கான இடங்களை காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளனர்.
எம்பிபிஎஸ் படிப்பில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரியில் இருந்த அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. பிடிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 25 இடங்கள், தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 896 இடங்கள் என 921 இடங்கள் காலியாக உள்ளன.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்பு: நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் அறிவிப்பு!