ETV Bharat / state

’மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள்’: ஸ்டாலினைக் குறிப்பிட்டு அகிலாஷ் யாதவ் ட்வீட் - Akhilesh Yadav on dmk chief mk stalin

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுகவிற்கு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினைக் குறிப்பிட்டு அகிலாஷ் யாதவ் ட்வீட்

author img

By

Published : May 2, 2021, 3:52 PM IST

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இதில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. திமுக சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினின் வெற்றி உறுதியாகியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி வெற்றிபெற்றுள்ளார். அதைப்போல குன்னூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 5,105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

ஸ்டாலினைக் குறிப்பிட்டு அகிலாஷ் யாதவ் ட்வீட்
அகிலாஷ் யாதவ் ட்வீட்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சின்னப்பனை வீழ்த்தி வெற்றிபெற்றார்.

இப்படி, தொடர் வெற்றிகள் பதிவாகிவரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’உங்களது மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள் ஸ்டாலின்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக தலைவர் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.