ETV Bharat / state

தீபாவளி விடுமுறை... ரூ.600 கோடி மது விற்பனைக்கு இலக்கு... - அரசு மது விற்பனை செய்ய இலக்கு

தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு 600 கோடி ரூபாய் வரை தமிழ்நாட்டில் மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி விடுமுறைக்கு கோடி ரூபாய் வரை மது விற்பனை செய்ய இலக்கு

author img

By

Published : Oct 22, 2022, 10:15 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுதும் தொடர் விடுமுறை மற்றும் திங்கள்கிழமை தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து மதுபான கடைகளிலும் 40 சதவீதம் சாதாரண மதுபானங்களும், 40 சதவீதம் நடுத்தர மதுபானங்களும், 20 சதவீதம் உயர்ரக மதுபானங்களும், இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி விடுமுறை நாள்கள் வெள்ளி (அக்.21) மாலை முதல் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் அன்று தீபாவளி என்பதாளும், இதனால் அதிகளவில் மது விற்பனை இருக்கும் என்பதாலும் 500 கோடியில் இருந்து 600 கோடி ரூபாய் வரை மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனாவிற்கு பிறகு வரும் தீபாவளி என்பதால் விற்பனையை அதிகரிக்கவும் திட்டம் என கூறப்படுகிறது. மேலும் மதுபான விற்பனை குறைந்துள்ள மாவட்டங்களில் மண்டல மேலாளர்கள் மேற்பார்வையிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு மதுபான கடைக்கும் 18 நாள்களுக்கு என்ன அளவிற்கு மது இருப்பு வைக்கப்படுமோ, அந்த அளவிற்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், சாதாரண மதுபானங்கள் கிடைக்கவில்லை என மது பிரியர்களுடைய குற்றச்சாட்டை கலைவதற்காக சாதாரண மதுபானங்களும் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், எலைட் மதுபான கடைகளில் உயர்ரக மதுபானங்கள் வெளிநாட்டு மதுபானங்கள் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இன்று (அக்.22) சனி நாளை ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை தீபாவளி வரை இந்த மூன்று நாட்களில் அதிக அளவில் மதுபான விற்பனை இருக்கும் என்பதால் மதுபானங்கள் தீர்ந்துவிட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மண்டல மேலாளர்கள் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு மது பிரியர்களுக்காக பிராந்தி, விஸ்கி, பீர், ரம், ஒயின், என அனைத்து ரகங்களிலும் அனைத்து பிராண்டுகளிலும் மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக்கில் அனைத்து விதமான மதுபானங்களும் கிடைப்பதால் மது பிரியர்கள் உற்ச்சாகமாக விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பட்டாசு கழிவுகளை தனியாக சேகரிக்க வேண்டும் - ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.