சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக, அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்துள்ளது. அதில் பூந்தமல்லி தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர் நசரத்பேட்டையில் உள்ள பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி (தனி) தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ மணிமாறன், மீண்டும் போட்டியிடுவார் என தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அவர்கள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவந்தனர். திடீர் திருப்பமாக பூந்தமல்லி தொகுதியை தங்களது கூட்டணி கட்சியான பாமகவிற்கு அதிமுக ஒதுக்கியது அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: 'எஸ்டி சான்றிதழ் வழங்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம்'- லிங்காயத் மக்க
ள்