ETV Bharat / state

டிங்குடி டிங்காலே... ஸ்டாலின் ஆட்சி டிங்குடி டிங்காலே! - ஜெயக்குமாரின் கலகல கண்டன உரை! - ஜெயக்குமார் பாடல்பாடி அசத்தல்

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுக சார்பில் சென்னை ராயபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காய்கறி மாலை அணிந்து பாடல் பாடி அசத்தினார்.

காய்கறி மாலையுடன் அமைச்சர் ஜெயக்குமார் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Dec 17, 2021, 5:22 PM IST

சென்னை: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் திமுக தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டியும் அதிமுக சார்பில் ராயபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கழுத்தில் காய்கறி, மளிகைப் பொருள்களை மாலையாகக் கோத்து கழுத்தில் அணிந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

டிங்குடி டிங்காலே

அப்போது அவர், "டிங்குடி டிங்காலே... ஸ்டாலின் ஆட்சி டிங்குடி டிங்காலே... தலையில் துண்டு போட்டுக்கணும் தங்கமே தில்லாலே..." எனப் பாடல் பாடினார். உடனே அதிமுக தொண்டர்கள் 'அண்ணன் DJ வாழ்க' என உற்சாகக் குரல் எழுப்பினர்.

காய்கறி மாலையுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆர்ப்பாட்டம்

பின்னர் செய்தியாளரிடம் ஜெயக்குமார், "ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்துசெய்வதாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் நீட் காரணமாக ஐந்து மாணவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

அராஜகம், அடாவடி செய்து கடைகளில் மாமூல் வசூலிக்கிறார்கள். கோவையில் 10ஆம் வகுப்பு மாணவி படுகொலைசெய்யப்பட்டது தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பைத் தரவில்லை.

நிழல் முதலமைச்சர்கள் உதயநிதி, சபரீசன்

மழை நின்ற பிறகும் பல இடங்களில் இன்னும் நீர் வடியவில்லை. முறையான நடவடிக்கை மேற்கொள்ளாததால் மு.க. ஸ்டாலின் தொகுதியிலேயே நீர் இடுப்பளவு தேங்கியது. பொய் வழக்கு மூலம் அதிமுகவை அழிக்க நினைப்பது பகல் கனவு.

கருணாநிதி காலத்திலும் இதேபோலதான் செய்தார்கள். எதிர்க்கட்சிகள் இருக்கக் கூடாது எனக் கருத்துரிமையைப் புறக்கணிக்கிறது திமுக அரசு. திமுகவிற்கு ஒத்தூதினால்தான் கருத்துச் சுதந்திரம் என்கிறார்கள். திமுகவை எதிர்ப்பவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது.

நடப்பது குடும்ப ஆட்சி, மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தாலும், நிழல் முதலமைச்சராக உதயநிதி, சபரீசன்தான் என்பது ஊரறிந்த உண்மை. உதயநிதி அமைச்சர் ஆக வேண்டும் என திமுகவில் சிலர் கூறுகின்றனர். எதுவும் நடக்கலாம். ஆனால் உதயநிதி அமைச்சரானாலும் நல்லது நடக்காது" என்றார்.

இதையும் படிங்க: பள்ளியில் சுவர் இடிந்து விபத்து: விசாரிக்க குழு அமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.