ETV Bharat / state

இன்று நடைபெறுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்

சென்னை : கரோனா பரவலுக்கும், பரபரப்பான அரசியல் சூழலுக்கும் இடையே அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

அதிமுக தலைமைக் கழகம்
அதிமுக தலைமைக் கழகம்
author img

By

Published : Sep 28, 2020, 7:42 AM IST

Updated : Sep 28, 2020, 9:29 AM IST

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் வரும் 2021ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகின்றன.

அந்த வகையில் ஆளும் கட்சியான அதிமுக தற்போது தனது தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளது. இதன் முதல்கட்டமாக அதிமுக செயற்குழு கூட்டம், சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று காலை 9.45 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட சுமார் 250 பேர் பங்கேற்க உள்ளனர். கரோனா தொற்று காரணமாக, அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி இந்த செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

கரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லா சான்றிதழும், தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ்களையும் உறுப்பினர்கள் எடுத்து வந்தால் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதிப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற உள்ள இந்த செயற்குழுக் கூட்டத்தில், ஏற்கனவே கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியே அவைத்தலைவர் மதுசூதனனை சந்தித்து பேசினார்கள்.

இக்கூட்டத்திற்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூட்டம் நடைபெறுவதையொட்டி அதிமுக தலைமைக் கழகம் இருக்கும் வழியேயான சாலைப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி ரீதியாக மாவட்டங்களைப் பிரித்தல், வழிகாட்டும் குழு அமைத்தல், வரவிருக்கும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் முடிவு, சசிகலா விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

இக்கூட்டத்தில் உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க இருக்கிறார்கள். அதிமுக தற்போது கட்சி ரீதியாக 67 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருச்சி, சென்னை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பத்து மாவட்டங்களைப் பிரிக்க வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் தரப்பு கோருவதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகின.

அதேபோல், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் ஒன்றாக இணையும்போது 11 பேரைக்கொண்ட வழிகாட்டும் குழு அமைக்க வேண்டும் என்றும் முன்னதாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அந்தக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை. இது தொடர்பாகவும் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இக்கூட்டத்தில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மறைந்த முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. அதிமுக ஆட்சியின் சாதனைகளான, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டை நினைவில்லமாக மாற்றியது, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. அரசு மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டது உள்ளிட்டவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

மேலும் இருமொழிக் கொள்கை, கச்சத்தீவு விவகாரம், இலங்கைத் தமிழர் விவகாரம் ஆகியவை குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும், செயற்குழு கூட்டத்தைத் தொடர்ந்து பொதுக்குழு தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பொதுக்குழுவில்தான் ஒப்புதல் வழங்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Sep 28, 2020, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.