ETV Bharat / state

அதிமுக கட்சியின் கூட்டத்திற்கு இலவச பிரியாணி தர வேண்டும் - கேட்ட நிர்வாகியைத் தேடும் போலீஸ் - Complaint against AIADMK secretary

சென்னையில் இயங்கிவரும் எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையின் மேலாளரை மிரட்டி, அதிமுக கூட்டத்திற்குச் செலவு செய்ய சொன்ன அதிமுக செயலாளர் மீது புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு இலவச பிரியாணி தர வேண்டும்- அதிமுக பிரமுகர்

author img

By

Published : Oct 2, 2022, 4:33 PM IST

சென்னை அருகே ராயப்பேட்டை ஜெஹானி ஜெஹான் சாலையில் எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடைக்குச் சொந்தமான கிளை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு சென்ற அதிமுக பகுதிச்செயலாளர் சீனிவாசன் என்பவர், அதிமுக கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணிக்கடையின் கிளை அதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதற்கு பிரியாணி கடையின் கிளை மேலாளர் ரூ.1000 அல்லது ரூ.2000 தருகிறோம் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், நீங்கள் தான் முழுச்செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அந்த அதிமுக பகுதிச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதனால் பிரியாணி கடை மேலாளர், 'நாங்கள் ஏன் முழுச்செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும். முடியாது' எனத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பகுதிச்செயலாளர் சீனிவாசன், அவரது சகோதரர் விஜயகுமார் உடன் சேர்ந்து எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடை மேலாளரிடம் பணம்பறிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் சீனிவாசன் தொலைபேசி மூலம் எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணிக்கடை கிளை மேலாளரை செல்போனில் தொடர்புகொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் அப்பகுதியில் இயங்கி வரும் ஆயிரம் கடைகளிலும் அதிமுக பகுதிச்செயலாளர் சீனிவாசன் பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும்; சில கடைகளில் மாமூல் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிமுக பகுதிச்செயலாளர் தொலைபேசி மூலம் மிரட்டும் ஆடியோ பதிவை வைத்து எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடை கிளை மேலாளர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:நாகர்கோவிலில் திருவிழாவில் பட்டாசு விபத்து... 14 பேர் படுகாயம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.