சென்னை: அதிமுகவின் பொதுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரையைத் தொடங்கி வைத்தனர்.
இதன்பின்னர் ஈடிவி பாரதத்திற்கு பேட்டியளித்த அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் விந்தியா, "அதிமுகவின் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை இன்று தொடங்கப்பட்டு உள்ளது. மக்களிடம் அதிமுகவின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை நாங்கள் அறிவித்துள்ளோம். அதனை ஏற்கும் காட்சிகள் கூட்டணிக்கு வரலாம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்து இருந்தாலும், தொடர்ந்து அதனை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: அதிமுக தலைமையில்தான் கூட்டணி; அயராது உழைத்து ஆட்சி அமைப்போம் - கே.பி.முனுசாமி