ETV Bharat / state

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. அதிமுக-பாஜக நாளை பேச்சுவார்த்தை.. - eps

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தலைமையகத்தில் நாளை அதிமுக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக, பாஜக நாளை பேச்சுவார்த்தை

author img

By

Published : Jan 20, 2023, 1:55 PM IST

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தலைமையகத்தில் நாளை (ஜனவரி 21) அதிமுக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 2021ஆம் ஆண்டு தேர்தலின்போது ஈரோடு கிழக்கில் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட்டு தோல்வியை தழுவியது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவே போட்டியிட விரும்புவதாக தாமாகவிடம் அதிமுக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விருப்பத்தை ஏற்று இடைத்தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் என்று ஜி.கே.வாசன் அறிவித்தார்.

இதனிடையே பாஜக இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வந்த மறுநாளே 14 பேர் கொண்ட தேர்தல் குழு அமைத்தது. இதனால் பாஜக தனித்து போட்டியிட தயாராகி விட்டதாக கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, தேர்தல் குழு அமைத்தது என்பது பாஜகவில் நடைமுறைகளில் உள்ள வழக்கம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரிடமும் பேசியுள்ளேன். முடிவு பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாளை(ஜன.21) பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அதிமுக நிர்வாகிகள் இடைத்தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். 2024ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுகவே இடைத்தேர்தலில் போட்டியிடும் என்ற நிலைப்பாட்டை பாஜக எடுக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: துப்பாக்கி சுடும் பயிற்சி: கட்டட தொழிலாளர் மீது பாய்ந்த குண்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.