ETV Bharat / state

அதிமுக உண்ணாவிரதம் அறிவிப்பு: அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு - edappadi pazhanisaamy

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்கட்சித் துணைத் தலைவராக பேரவையில் அங்கீகரிக்காததைக் கண்டித்து நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிகோரி அதிமுக சாரபில் சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

நாளை அதிமுக உண்ணாவிரதம் ; சட்டப்பேரவையில் ஜனநாயகப் படுகொலை...!

author img

By

Published : Oct 18, 2022, 4:12 PM IST

Updated : Oct 18, 2022, 4:33 PM IST

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக சட்டப்பேரவையில் அங்கீகரிக்காததை கண்டித்து நாளை (அக்.19) அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடைபெறும் என அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

அதிமுக உண்ணாவிரதம் அறிவிப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்றபோது பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களால் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்கக்கோரி அதிமுக சார்பில் சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடிதம் வழங்கி வெகுநாட்கள் ஆகியும் இதுவரை ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்காததை குறிப்பிட்டு அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இன்று (அக்.18) சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும், ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக சட்டப்பேரவையில் அங்கீகரிக்காததைக் கண்டித்து நாளை (அக்.19) அதிமுக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் ஆகியோர் இன்று (அக்.18) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், ”அறவழி போராட்டம் நடத்தவுள்ளதால் முறையாக அனுமதி கேட்டு மனு அளித்துள்ளோம். பரிசீலித்து பதிலளிப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி கிடைக்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர் முடிவெடுப்பார்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், ”62 பெரியதா? 4 பெரியதா? என்பது கூட தெரியாமல் சபாநாயகர் உள்ளார். அதைக் கண்டித்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளோம்” எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ்-க்கு ஆதரவாக திமுக செயல்படுவது வெட்ட வெளிச்சமாகிவிட்டது - - எடப்பாடி பழனிசாமி

Last Updated : Oct 18, 2022, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.