ETV Bharat / state

திரிசங்கு நிலையில் அதிமுக கூட்டணி...!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஆளும் அதிமுகவின் தோழமைக் கட்சிகளான பாமக, புதிய தமிழகம், தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை ஒவ்வொன்றும் ஒரு கோரிக்கையை நிறைவேற்ற கோரிக்கைவிடுத்துள்ளது.

AIADMK and its allies in alliance twist
கூட்டணி திருகுவலியில் அதிமுகவும் அதன் தோழமை கட்சிகளும்
author img

By

Published : Jan 28, 2021, 10:15 PM IST

சென்னை: அதிமுக, தோழமைக் கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ள நிலையில், இது அண்ணா திமுகவுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

பாமகவைப் பொறுத்தவரையில், அதன் நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்திவந்த நிலையில், இப்போது உள் ஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்.

மேலும், இந்தக் கோரிக்கையைத் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு முன்பாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில், அரசு அவ்வாறு செய்ய தாமதமானால் பாமக செயற்குழுவை உடனடியாகக் கூட்டி, அரசியல் ரீதியிலான அடுத்தக் கட்ட முடிவை எடுக்கும் என்று அதிமுக வுக்கு எச்சரிக்கை விடுத்தார். எனினும், இதுபற்றி ஆளும் அதிமுக அரசு இதுவரை பதில் அளிக்காத நிலையில், கூட்டணியில் விரிசல் ஏற்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

AIADMK and its allies in alliance twist
ராமதாஸ்

இதேபோல, புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் ஆகிய இருவரும் குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய ஏழு உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இவர்களது கோரிக்கைகளை ஏற்று அரசாணைக்கு பரிந்துரைக்கப்படும் என்று அறிவித்தார்.

எனினும், இந்தக் கோரிக்கை மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதால், மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இல்லையெனில், அதிமுக கூட்டணியிலிருந்து விலகி விடுவோம் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் புதுக்கோட்டை மாவட்ட செயலாளரான, ஜஸ்டின் திரவியம், "எங்கள் கட்சி, தொடர்ந்து பல வருடங்களாக தேவேந்திர குல வேளாளர் அரசாணையை வெளியிட வலியுத்தி வந்துள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு இது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அரசாணை விரைவாக வெளியிடப்படும் என்று நம்புகிறோம்," என்றார்.

AIADMK and its allies in alliance twist
கிருஷ்ணசாமி

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தென் தமிழ்நாட்டில் முக்குலத்தோர், நாடார், பள்ளர்கள், பிள்ளைமார்கள், மீனவர்கள், யாதவர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இதேபோல, மேற்கு தமிழ்நாட்டில், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள், கொங்கு வெள்ளாளர்கள் சமூகம் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. வன்னியர்களும், அருந்ததியர்களும் குறைந்த அளவில் வசித்து வருகின்றனர்.

மத்திய மண்டலத்தில், கள்ளர்கள், முத்தரையர்கள், பள்ளர்கள், சோழிய வெள்ளாளர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். வட தமிழ்நாட்டை பொறுத்தவரை, வன்னியர்கள், பறையர்கள் சமூகம் அதிகமாக உள்ளது. வட கிழக்கு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொறுத்தவரை, முதலியார்கள் ஆதிக்கம் இருந்து வருகிறது.

AIADMK and its allies in alliance twist
ஜான் பாண்டியன்

பி. ராமஜெயம், அரசியல் ஆய்வாளர், இதுபற்றி கூறுகையில், "தேர்தல் நெருங்கி வரும்பொழுது, இந்த மாதிரியான கோரிக்கைகள், ஆளும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தத்தான் செய்யும். குறிப்பாக, ஆளும் கட்சி பலவீனமான நிலையில்தான், இந்த மாதிரியான கோரிக்கைகள் வைக்கப்படும். பாமக, புதிய தமிழகம், மக்கள் முன்னேற்ற கழகம் தங்கள் கட்சிகளின் பலம், முக்கியத்துவத்தை அரசியல் வட்டாரங்களில் காண்பிக்க, இந்த மாதிரியான கோரிக்கைகளை வைக்கலாம்" என்றார்.

மேலும் இதுகுறித்து, அதிமுக செய்தி தொடர்பாளர் கே. சிவசங்கரி நம்மிடம் கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே சாதி வாரியான கணக்கெடுப்பிற்கு பரிந்துரை செய்துள்ளார் என்பதை எல்லோரும் அறிவார்கள். இதைப் புரிந்து கொண்டு அரசியல் கட்சிகள் தங்களது கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் - ஆர்.எஸ். பாரதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.