ETV Bharat / state

அல்ட்ரா லெவல் காம்ப்ளக்ஸாக மாறும் அடையாறு பஸ் டிப்போ! - Metro Rail

சென்னையில் உள்ள அடையாறு பஸ் டிப்போவை 9 மாடிகள் கொண்ட வணிக வளாகமாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அடையாறு பஸ் டிப்போ டூ அல்ட்ரா லெவல் காம்ப்ளக்ஸ் - செலவு இவ்வளவா?

author img

By

Published : Dec 31, 2022, 5:09 PM IST

Updated : Dec 31, 2022, 5:17 PM IST

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் வரும் அடையாறு பஸ் டிப்போ, மொத்தம் 5.63 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த டிப்போவில் இருந்து தினசரி 159 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 2 மாடிகள் கொண்ட இந்த டிப்போவில், நிர்வாக அலுவலகம், வாகன நிறுத்துமிடம், டயர் பிரிவு, பராமரிப்பு பிரிவு மற்றும் உணவகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

இதற்கு அருகில் அடையாறு மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரை உள்ள வழித்தடத்தில் அடையாறு மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிலையம், அடையாறு பஸ் டிப்போவில் இருந்து 800 மீட்டர் தொலைவில் அமைய உள்ளது.

எனவே அடையாறு டிப்போவை பல்வேறு வசதிகளுடன் கூடிய வணிக வளாகமாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி தரைத்தளம் மற்றும் முதல் தளம் பேருந்துகளை நிறுத்துவதற்கான இடமாக பயன்படுத்தப்பட உள்ளது. 2வது தளம் பஸ் டிப்போ மற்றும் வணிக கடைகள் இருக்கும் தளமாக இருக்கும்.

3 முதல் 9 வரை உள்ள தளங்கள் அனைத்தும் வணிக நிறுவனங்கள் உள்ள தளமாக அமைக்கப்படும். இவற்றில் தியேட்டர், உள்ளரங்க விளையாட்டுகள், கூட்ட அரங்கம் ஆகியவைகள் இருக்கும். இந்த திட்டமானது ரூ.993 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.

இதற்கான கட்டுமான பணிகள், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு உள்ள வணிக வளாகங்கள் மூலம் ரூ.120 கோடி, மற்றவை மூலம் ரூ.6 கோடி என மொத்தம் ரூ.126 கோட வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ரூ.300 கோடி செலவில் செங்கல்பட்டில் தாவரவியல் பூங்கா!

Last Updated : Dec 31, 2022, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.