ETV Bharat / state

முதலமைச்சர் பதவியை சசிகலாவுக்கு திருப்பி அளிக்கும் விளம்பரமா? ஓபிஎஸின் வியூகம் என்ன? - ஓபிஎஸ் விளம்பரம்

சென்னை: ஜெயலலிதா அளித்த முதலமைச்சர் பதவியை மீண்டும், தான் திருப்பி அளித்ததுபோல், சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமியும் விசுவாசமாக இருக்க வேண்டும் என விளம்பரத்தின் மூலம் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வலியுறுத்துகிறரா? என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

advertisement emerges as sasikala
முதலமைச்சர் பதவி
author img

By

Published : Feb 7, 2021, 7:12 PM IST

தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி பதவி ஏற்றார். உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 2016 டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். தொடர்ந்து அப்போது நிதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆளுநர் வித்யாசாகர்ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக பொதுக்குழுவால் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி சசிகலா தேர்வு செய்யப்பட்டார். 2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா உயிரிழந்துவிட்ட நிலையில், இரண்டாவது குற்றவாளியான சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றார்.

அப்போது கட்சியில் தனக்கு விசுவாசமாக இருந்த எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்தார். அதன் பின்னர் 2017ஆம் ஆண்டு பிப்பவரி மாதம் 16ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர், நிதித்துறை அமைச்சராகவும் 2017 ஆகஸ்ட் 21ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் பரப்புரையில் ஈடுப்படாமல் அமைதி காத்து வருகிறார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாராக இருந்த சசிகலா நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சிறை வாசம் முடிந்து நாளை (பிப்.8) தமிழ்நாடு வருகிறார். இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியின் நிர்வாகிகள் பலர் சசிகலாவை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், விசுவாசத்தில் "நிகழ்கால பரதன்" எனக் குறிப்பிட்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்றப்போது பாராட்டியதை சுட்டிக்காட்டி விளம்பரம் செய்துள்ளார்.

விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டவை..

"மும்முடி சோழன்" எனக் கூறி தான் முதலமைச்சராக இருந்த வரலாற்றையும் கூறியுள்ளார். 2001ஆம் ஆண்டின் முதன்முறையாாக முதலமைச்சராக பதவியேற்கிறார் ஓ.பி.எஸ். அதற்கு பின்னர் 13 ஆண்டுகள் கழித்து 2014ஆம் ஆண்டு அதே பதவி அவருக்கு வழங்கப்பட்டது என்றால் எந்தளவிற்கு கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் விசுவாத்துடன் இருந்திருப்பார். 2016இல் மூன்றாம் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, மக்களின் ஏகோபித்த ஆதரவு இருந்தும், தலைமைக் கழக நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கட்சிக்கு கட்டுப்பட்டு விட்டுக் கொடுத்தார்.

courtesy Bharathan
விளம்பரம்

அரசியல் வாழ்க்கையில் இவருக்கு வழங்கப்பட்ட நகரமன்றத் தலைவர் பதவி முதல் எந்த ஒரு பதவியும் இவரிடம் வந்து, கைவிட்டு போனதாக வரலாறு இல்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சராக 3 முறை பதியேற்ற போதும், தானாக விரும்பியே பதிவியை விட்டு கொடுத்தார்.

அதேபாேல் இவரிடம் வந்த அத்தனைப் பதிவிகளும் தானாக வந்ததே தவிர, இவராக எந்தப் பதவியையும் தேடி சென்றது கிடையாது என கூறப்பட்டுள்ளது. ராமயணத்தில் வரும் பரதன் கதாபாத்திரத்தை ஒப்பிட்டு விளம்பரம் அளித்துள்ளார். முதலமைச்சர் பதவியை தனக்கு அளித்தவர்களுக்கு திருப்பி தந்தது போல், எடப்பாடி பழனிசாமியும் நடக்க வேண்டும் என கூறுவது போல் இந்த விளம்பரம் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: அரசியலுக்காக வீட்டை முற்றுக்கையிடுகின்றனர்: அமைச்சர் தங்கமணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.