ETV Bharat / state

முன்கூட்டியே தேர்தலை சந்திக்க அதிமுக திட்டம்! - Consultation with District Election Officers

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல் 3 அல்லது 4 ஆவது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக சார்பாக தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADMK plan to face election earlier
ADMK plan to face election earlier
author img

By

Published : Dec 21, 2020, 4:32 PM IST

இந்திய தேர்தல் ஆணைய அலுவலர்கள் ஆலோசனை

2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணைய அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆலோசனை நடத்தினர். இந்திய தேர்தல் ஆணைய பொது செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழுவினர் இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பிரதிநிதியும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், "மே மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் தமிழ்நாடும் முழுவதும் ஒரே கட்டமாக, ஏப்ரல் 3 அல்லது 4ஆவது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த கிராமங்களில் வாக்குசாவடிகளை அமைக்க வேண்டும. ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்கு சாவடிகளை இரண்டாகப் பிரிக்க வேண்டும், குடிபெயர்ந்து சென்றவர்களின் பெயர்களை உடனடியாக சேர்க்கவும், இறந்தவர்களின் பெயர்களை உடனடியாக நீக்கவும் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.

மேலும் பேசிய அவர், "எளிய மக்கள் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதால் முதலமைச்சர் பொங்கல் பணத்தை அதிகரித்துள்ளார் தேர்தலுக்காக இதனை அறிவிக்கவில்லை" என்றார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

பின்னர் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி "தமிழ்நாட்டில் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வைத்துள்ளோம். தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் கொடுக்கும் மனுவுக்கு உடனடியாக பதில்கள் தர வேண்டும், 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் கருத்து தெரிவித்துள்ளோம்.

ADMK plan to face election earlier
இந்திய தேர்தல் ஆணைய அலுவலர்கள் ஆலோசனை

கடந்த தேர்தலில் தபால் ஓட்டு முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தேர்தலில் வெற்றி பெற்ற அப்பாவு தோற்கடிக்கப்பட்டுள்ளார். எனவே, இதுபோன்ற தவறுகள் தபால் ஓட்டுகளில் நடைபெறக் கூடாது என வலியுறுத்தி, தபால் வாக்கு எண்ணிக்கை தனியாக நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளோம்" என்றார்.

பாஜக மாநில துணைத் தலைவர் எம்.என். ராஜா

கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் எம்.என். ராஜா, "வாக்கு சாவடிகள் கூட்ட நெரிசல் இன்றி, கிருமி நாசினிகள் தெளித்து தூய்மையாக வைக்க வேண்டும். எந்த தவறும் எந்த இடத்திலும் நடக்க கூடாது என்று கூறியுள்ளோம்" என்றார்.

ஒரே கட்டமாக தேர்தல் நடத்தை வேண்டும் என்று திமுக கூறியுள்ள கருத்திற்கு பதிலளித்த எம்.என். ராஜா, " வாக்களிக்க வேண்டியது மக்கள். எனவே, அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத விதத்தில் தேர்தல் நடத்த வேண்டும். எனவே தேர்தல் ஆணையம் இதுகுறித்து கருத்தில் கொண்டு தேர்தல் நடத்தினால் அதனை ஏற்று தேர்தலை சந்திக்க பாஜக தயாராக உள்ளது" என்றார்.

தேமுதிக துணைப் பொது செயலாளர் பார்த்தசாரதி

ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக - ஆதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி துணைப் பொது செயலாளர் பார்த்தசாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தேர்தல் பணப் பட்டுவாடா நாட்டிலேயே இந்தியாவில் தான் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வழங்க வேண்டும். தேர்தல் நடந்து 2 நாட்களுக்குள் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.

மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை

அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் இந்திய தேர்தல் ஆணைய அலுவலர்கள் தமிழ்நாடு மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

தேர்தல் ஆணைய அலுவலர்கள் ஆலோசனை

இதில், தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாஹூ, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் தேர்தல் அலுவலர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நேரில் கலந்துகொண்டனர்.

கரோனா தொற்று காரணமாக மற்ற மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.