Intro:எத்தனை இடர்பாடுகள் இருப்பினும் காலத்தால் அனைத்தும் மாறும்; புதியன தோன்றும், மகிழ்ச்சி மலரும் என்ற புதிய நம்பிக்கைகளை புத்தாண்டு நமக்கு அளிக்கிறது - அதிமுக வாழ்த்து செய்தி.
Body:அதிமுக சார்பில் தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி....
அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் சேர்ந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை தமிழ்நாடு மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
அதில், “சித்திரை முதல் நாளாம் சார்வரி என்ற தமிழ் புத்தாண்டு புலர்கின்ற இந்த இனிய நன்னாளில், உலகெங்கும் வாழ்கின்ற அன்புக்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எங்களது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
எத்தனை இடர்பாடுகள் இருப்பினும் காலத்தால் அனைத்தும் மாறும்; புதியன தோன்றும், மகிழ்ச்சி மலரும் என்ற புதிய நம்பிக்கைகளை புத்தாண்டு நமக்கு அளிக்கிறது.
"சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்க துலங்குக வையகமே தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே" என்று மகாகவி சுப்பிரமணிய பாரதி பாடியதற்கு ஏற்ப, இன்று உலகைச் சூழ்ந்திருக்கும் இன்னல்கள் யாவும் தீர்ந்து பொய்யாகி, புது வாழ்வு மலர புத்தாண்டில் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுமென்று எங்களது மனமார்ந்த பிரார்த்தனையை தமிழ் மக்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
'எத்தனை இடர்பாடுகள் இருப்பினும் காலத்தால் அனைத்தும் மாறும்; புதியன தோன்றும்' - அதிமுக வாழ்த்துச் செய்தி - சித்திரை வாழ்த்துச் செய்தி கூறிய அதிமுக
எத்தனை இடர்பாடுகள் இருப்பினும் காலத்தால் அனைத்தும் மாறி புதியன தோன்றும் என அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.