ETV Bharat / state

நாளை அதிமுக பொதுக்கூட்டம் - முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமா? - 2021 தேர்தல்

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொண்டு, அதற்கான சான்றிதழுடன், அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Admk meeting tomorrow
Admk meeting tomorrow
author img

By

Published : Jan 8, 2021, 1:49 PM IST

சென்னை: நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை அதிமுக பொதுக்கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம், கூட்டணியை இறுதி செய்ய கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நாளை நடைபெறும் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டம் மற்றும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செயற்குழு கூட்டம் நடத்தி இது குறித்து விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில் அதிமுக 2019 டிசம்பரில் செயற்குழு பொதுக் குழுக் கூட்டங்களை நடத்தியிருந்தது. அதன்பிறகு 2020ல் செயற்குழுக்கூட்டம் மட்டுமே அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்றது. பொதுக்குழு அதிமுக சார்பில் நடைபெறவில்லை.

அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 20-ம் தேதி நடைபெற்ற ஆலோசனையின்போது, ஜனவரி 9-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, சென்னை வானகரத்தில் மண்டபத்தில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் (நாளை) காலை 8.50 மணிக்கு நடைபெறுகிறது.இதற்கான அழைப்பிதழ் தனித்தனியாக அனுப்பிவைக்கப்பட் டுள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுகவில் 300-க்கும்மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். பொதுக்குழு கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பார்கள். இதுதவிர சிறப்பு அழைப்பாளர்கள் 1,500-க்கும் மேற்பட்டவர்களும் வழக்கமாக வருவார்கள்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொண்டு, அதற்கான சான்றிதழுடன், அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்மானங்கள்:

* கரோனா தொற்று காலத்தில் அரும்பணியாற்றி வரும் முதல்வர், துணை முதல்வர், கழக உடன்பிறப்புகளுக்கு நன்றியும், பாராட்டும்.

* கரோனா வைரஸிற்கு எதிரான பணியில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கு நன்றி.

* கரோனா நிவாரணத்திற்கும், தடுப்பிற்கும் மத்திய அரசு உரிய நிதி ஆதாரத்தை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்.

* தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

* பொருளாதார வல்லுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்த தமிழக முதல்வருக்கு பாராட்டு.

* இருமொழிக் கொள்கையே அதிமுகவின் நிலைப்பாடு. எந்த மொழிக்கும் கழகம் எதிரானது அல்ல. எந்த மொழியும் எம்மீது திணிக்கப்படுவதையும் எம்மால் ஏற்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

* இலங்கைத் தமிழர் பாதுகாப்பு

* நீட் தேர்வு முறையைக் கைவிடுமாறு மத்திய அரசை அதிமுக கேட்டுக் கொள்கிறது.

* கச்சத்தீவை மீட்டு எடுப்போம்

* மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு தமிழக முதல்வருக்கு பாராட்டு.

* மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கு முதல்வருக்கு பாராட்டு.

* பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியுள்ள தமிழக முதல்வருக்கு நன்றியும், பாராட்டும்.

* காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை அழிவிலிருந்து காப்பாற்றிய தமிழக அரசுக்கு நன்றி.

* தமிழகத்தில் முதல்கட்டமாக 6 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி.

* விவசாயிகள் நலன்கருதி நடப்பாண்டில் 50 ஆயிரம் பம்பு செட்டுகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கியதற்கு நன்றி

* காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு கண்டனம். இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த உரிய நேரத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு பாராட்டு.

* கலாச்சாரத்தை ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழுவில் தமிழர்களை நியமிக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துகிறது.

* தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் 2000 அமைப்பதற்கு தமிழக அரசுக்கு பாராட்டு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகவின் பொதுக்குழுவில் சசிகலா விடுதலை தொடர்பாகவும் மற்றும் தேர்தலில் வெற்றிபெற அதிமுக தொண்டர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் முக்கிய முடிவுகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.