ETV Bharat / state

’இருள் அகலும் ஒளி தோன்றி நம்மை மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும்’ - அதிமுகவின் ஈஸ்டர் வாழ்த்து

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்களுக்கு அதிமுக சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Apr 11, 2020, 1:02 PM IST

admk greets christian people on easter
admk greets christian people on easter

அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சேர்ந்து ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”இறைமகன் இயேசு பெருமான் சிலுவைப் பாடுகளை ஏற்று, மானுடத்தை மீட்க மரணத்தை வென்று மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து ஒப்பற்ற விழாவாம் ஈஸ்டர் பெருவிழாவைக் கொண்டாடும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு எங்கள் இதயமார்ந்த உயிர்ப்பு ஞாயிறு நல்வாழ்த்துகள் உரித்தாகுக.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனாவை எதிர்த்து ஓரணியில் நின்று போராடிக் கொண்டிருக்கும் நாம், "இருள் அகலும் ஒளி தோன்றி நம்மை மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும்" என்னும் புதிய நம்பிக்கையை தருவதாக இந்த ஆண்டின் ஈஸ்டர் பெருவிழா அமைகிறது.

சமூகத்தின் நன்மைக்காக விழித்திருந்தும், தனித்திருந்தும் வீட்டிலேயே இறை வழிபாடுகளை இந்த ஆண்டு மேற்கொண்டிருக்கும் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இறைவனின் கருணையும் இரக்கமும் நம் அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிறைந்திருக்கட்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.