சென்னை: அதிமுக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் மருத்துவர். மைத்ரேயனின் மூத்த சகோதரி மாலினி மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.
பாசமிகு சகோதரியை இழந்து வாடும் அன்புச் சகோதரர் மைத்ரேயன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மாலினியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'நான் இறந்தால் மவுன அஞ்சலி செலுத்த வேண்டாம்' - கண்கலங்கிய மைத்ரேயன்