ETV Bharat / state

விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு - அதிமுக கண்டனம் - சென்னை மாவட்ட செய்திகள்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்துவதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிமுக கண்டனம்
அதிமுக கண்டனம்
author img

By

Published : Oct 18, 2021, 5:20 PM IST

சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், "கழக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களிலும், அவரது உறவினர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு, தனது பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி, வக்கிர நடவடிக்கைகள் மூலம் தற்காலிக மகிழ்ச்சியை தேடி இருப்பது கண்டனத்திற்கு உரியது.

விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொன்விழா கொண்டாடி வரும் எழுச்சிமிகு தருணத்தில், நேற்று (ஆக்.17) தலைநகர் சென்னையிலும், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் நடைபெற்ற உற்சாகமான விழாக்களைக் கண்டு மனம் பொறுக்க முடியாத திமுக, விடிந்தவுடன் காவல் துறையை விட்டு லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.

அதிமுக அறிக்கை
அதிமுக அறிக்கை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆழம் காண முடியாத அலைகடலுக்கு ஒப்பான பேரியக்கம். இந்த இயக்கம் திமுக-வின் முயற்சிகளால் முடங்கிடவோ, முடியாமற்போகவோ, ஓய்ந்து, சாயப்போவது இல்லை.

அதிமுக கண்டனம்

எத்தனை கழக நிர்வாகிகள் மீது என்ன வழக்குகள் போட்டாலும், அவதூறு பரப்பினாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்காலத்தில் அடையப்போகும் வெற்றிகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வருமானத்திற்கு அதிகமாக ரூ.27 கோடி சொத்து சேர்த்த விஜயபாஸ்கர்: எஃப்.ஐ.ஆரில் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.