நேற்று காட்டுமன்னார் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, "இந்த ஆட்சியை செருப்பால் அடித்து விரட்ட வேண்டும்" என்று பேசியது முதல்வரை இழிவுபடுத்தும் நோக்கில் இருப்பதாக அதிமுக சார்பில் கொடுக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சாவூர் மாவட்டம் குத்தாலத்தில் காவல் துறை அனுமதியை மீறி கூட்டம் நடத்திய உதயநிதி கைது செய்யப்படும் போது, சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி-யின் பெயரை குறிப்பிட்டு மிரட்டும் தொனியில் பேசியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி நிகழ்ச்சிக்கு செல்லும் இடமெல்லாம் அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் மிரட்டி அவதூறாக பேசிவரும் உதயநிதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் புகாரளித்துள்ளார்.