இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "கிண்டி அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2020ஆம் ஆண்டிற்கான பொறியியல், பொறியியல் அல்லாத 7 தொழிற்பிரிவுகளில், எட்டு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவிகளுக்கு வாய்ப்பு தரும்விதமாக நேரடி சேர்க்கை நடைபெற்றுவருகிறது.
இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவிகள், வருகின்ற 31ஆம் தேதிக்குள் இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாக பயிற்சியில் சேரலாம்.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தகுதிபெற்ற மாணவியருக்கு கட்டணமில்லா பயிற்சி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை, விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா சீருடை, மாதந்தர உதவித் தொகை ரூ.500, விலையில்லா வரைபடக் கருவிகள் எனப் பல சலுகைகள் வழங்கப்பட்டுவருகின்றன.
பயிற்சி முடிவில், மத்திய அரசின் சான்றிதழ், பெரிய வேலையளிக்கும் முன்னோடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும். மேலும், விவரங்கள் அறிய இத்தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண் 044- 22501982, 9499055651ஐ அணுகலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 7.5% இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு அனுமதியளிப்பாரா ஆளுநர்? தள்ளிப்போகும் கலந்தாய்வு