ETV Bharat / state

சென்னை விமான நிலையத்திலிருந்து கூடுதல் விமான சேவை...உள்நாட்டு விமான பயணிகள் உற்சாகம் - விமான சேவை

சென்னை விமான நிலையத்திலிருந்து பெங்களூர், மும்பை, கொச்சி, மைசூர் ஆகிய நகரங்களுக்கு இந்த மாதத்தில் இருந்து புதிதாக கூடுதல் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமானங்கள் எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்திலிருந்து கூடுதல் விமான சேவை...உள்நாட்டு விமான பயணிகள் உற்சாகம்

author img

By

Published : Sep 6, 2022, 7:22 AM IST

சென்னை விமான நிலையத்திலிருந்து பெங்களூர், மும்பை, கொச்சி, மைசூர் ஆகிய நகரங்களுக்கு மேலும் கூடுதல் உள்நாட்டு விமானங்கள், இந்த மாதத்தில் இருந்து புதிதாக இயக்கப்படுகின்றன. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமானங்கள் எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளதால் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

மும்பையை தலைமையிடமாக வைத்து ஆகாசா ஏர் விமான நிறுவனம் மும்பை, அகமதாபாத் ஆகிய இடங்களுக்கு புதிய விமான சேவைகளை தொடங்கியுள்ளது. அந்த நிறுவனம் தற்போது சென்னையையும் மையமாக வைத்து அதிகமான உள்நாட்டு விமான சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து தனியார் விமான நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது,

இம்மாதம் 10 ஆம் தேதியிலிருந்து தினமும், பெங்களூரில் இருந்து காலை 8:30 மணிக்கு புறப்படும் இந்த விமானம், காலை 9:35 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேருகிறது. பின்பு மீண்டும் அதே விமானம் காலை 10:15 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 11:20 மணிக்கு பெங்களூர் சென்றடைகிறது.

சென்னை விமான நிலையத்திலிருந்து கூடுதல் விமான சேவை...உள்நாட்டு விமான பயணிகள் உற்சாகம்

இதை அடுத்து மதியம் 12 மணிக்கு பெங்களூரில் புறப்பட்டு, பிற்பகல் 1:05 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது. பின்பு பிற்பகல் 1:20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2:35 மணிக்கு இந்த விமானம் பெங்களூர் சென்றடைகிறது. இந்த விமானம் வரும் பத்தாம் தேதியில் இருந்து தினசரி விமானங்களாக இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து பெங்களூருக்கு தற்போது தினமும் 9 விமானங்களும், பெங்களூரிலிருந்து சென்னைக்கு 9 விமானங்களுமாக ஒரு நாளுக்கு 18 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இனிமேல் 22 விமான சேவைகளாக அதிகரிக்கின்றன. இதனால் பயணிகளுக்கு கூடுதல் விமான சேவை வசதிகள் கிடைக்கும்.

அதைப்போல் இம்மாதம் 15 ஆம் தேதியில் இருந்து மாலை 6:10 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும் ஆகாசா ஏர் விமானம் இரவு 7:55 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது. அதன்பின்பு அதே விமானம் மீண்டும் இரவு 8:50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 10:45 மணிக்கு மும்பை சென்றடைகிறது. இதுவரை சென்னை மும்பை இடையே 19 புறப்பாடு விமானங்கள்,19 வருகை விமானங்கள் என மொத்தம் 38 விமானங்கள் உள்ளன. அது இனிமேல் 40 விமானங்களாக அதிகரிக்கப்படுகிறது.

மேலும் இம்மாதம் 26 ஆம் தேதியில் இருந்து ஆகாசா ஏர் விமானம் சென்னையில் இருந்து கொச்சிக்கும், கொச்சியில் இருந்து சென்னைக்கும் தினசரி விமானங்களை புதிதாக இயக்குகிறது. மாலை 5 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம், மாலை 6 மணிக்கு கொச்சி சென்றடைகிறது. மாலை 6:15 மணிக்கு கொச்சியிலிருந்து புறப்படும் விமானம் இரவு 7:15 மணிக்கு சென்னை வந்தடைகிறது.

சென்னை கொச்சி இடையே இதுவரை தினமும் 4 புறப்பாடு 4 வருகை தினமும் 8 விமான சேவைகள் உள்ளன. இனிமேல் இது 10 விமான சேவைகளாக அதிகரிக்கப்படுகிறது.மேலும் தற்போது சென்னையில் இருந்து மைசூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மட்டும் ஒரு புறப்பாடு, ஒரு வருகை என 2 சேவைகளை இயக்கி வருகிறது. சென்னை மைசூர் இடையே பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் புதிதாக சென்னை- மைசூர்-சென்னை இடையே விமான சேவைகளை தொடங்கியுள்ளது.

வாரத்தில் 3 நாட்கள் இந்த சேவைகள் இயக்கப்படுகின்றன. ஞாயிறு, புதன், மற்றும் வெள்ளி ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. காலை 9:25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 11 மணிக்கு மைசூர் சென்றடைகிறது. பின்பு மைசூரில் இருந்து காலை 11:30 க்கு அதே விமானம் புறப்பட்டு பகல் ஒரு மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேர்கிறது.

இந்த விமானம் ஏ.டி.ஆர் எனப்படும் சிறிய ரக விமானம் 74 பயணிகள் வரை இதில் பயணிக்கலாம். இதில் சலுகை கட்டணமாக ஒரு வழி பயணத்திற்கு ரூ.4,678 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் விமான சேவைகள் அதிகரித்துள்ளது பயணிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் டீசல் தட்டுப்பாடு...வாகன ஓட்டிகள் அவதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.