ETV Bharat / state

நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற விவகாரம்: பெங்களூரு நீதிமன்றத்தில் சென்னை போலீசார் மனு

நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் கொலை மிரட்டல் விடுத்த ஹரி நாடாரை கைது செய்ய அனுமதி வழங்கக்கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் சென்னை காவல் துறையினர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

சென்னை போலீசார் மனு
சென்னை போலீசார் மனு
author img

By

Published : Jan 14, 2022, 6:35 AM IST

பெங்களூரு : பிரண்ட்ஸ் பட நடிகையான விஜயலட்சுமி கடந்த 2020 ஆம் ஆண்டு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்டு வந்தார்.

இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடார், சீமானுக்கு ஆதரவாக விஜயலட்சுமியின் நாக்கை அறுத்துவிடுவேன் எனவும் சாதி குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இழிவாக பேசியதால் விஜயலட்சுமி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமான், ஹரிநாடார் மற்றும் சதா நாடார் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணையானது நடந்து வந்தது.

இதனிடையே கடன் வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் ஹரி நாடாரை கேரளாவில் வைத்து கடந்த வருடம் பெங்களூரு காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் ஹரி நாடாரை அடைத்தனர். பின்னர் இந்த வழக்கு பெங்களூரு பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது.

சென்னை போலீசார் மனு
சென்னை போலீசார் மனு

இந்நிலையில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரை நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் கைது செய்ய அனுமதி கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் திருவான்மியூர் காவல் துறையினர் மனு தாக்கல் செய்து உள்ளனர். ஹரி நாடாரை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: சென்னையில் இளம்பெண் மருத்துவர் தற்கொலை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.