ETV Bharat / state

எழும்பூர் நீதிமன்றத்தில் மீரா மிதுன் - போலீஸ் காவல் கேட்டு நடிகை மீரா மிதுன்

சென்னை: சிறையில் அடைக்கப்பட்ட மீரா மிதுனுக்கு வழக்குப்பதிவு செய்து எம்.கே.பி. நகர் காவல் துறையினர் இன்று (ஆகஸ்ட்.26) போலீஸ் காவல் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மீரா மிதுன்
Meera Mithun
author img

By

Published : Aug 26, 2021, 2:27 PM IST

Updated : Aug 26, 2021, 5:20 PM IST

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரை சேர்ந்த ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு நடிகை மீரா மிதுன் மீது புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில் நடிகை மீராமிதுன் சமூக வலைதளங்களில் தனது பெயரையும், புகைப்படத்தையும் தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பிவருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் அவதூறு பரப்புதல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது எம்.கே.பி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் சமீபத்தில் பட்டியலினத்தோர் குறித்து இழிவாக பேசி அவதூறு பரப்பும் வகையில், வீடியோ வெளியிட்டார்.

இதுகுறித்து மீரா மிதுன் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

எழும்பூர் நீதிமன்றத்தில் மீரா மிதுன்

சிறையில் அடைக்கப்பட்ட மீரா மிதுனை எம்.கே.பி. நகர் காவல் துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்வதற்காக எழும்பூர் நீதிமன்றத்தில் கைது வாரண்ட் பெற்று நேற்று (ஆகஸ்ட்.25) கைது செய்தனர்.

மேலும் மீரா மிதுனை விசாரணை செய்ய இரண்டு நாள்கள் போலீஸ் காவல் கேட்டும் மனு தாக்கல் செய்திருந்தனர். அதனடிப்படையில், ஏற்கனவே சிறையில் இருக்கக்கூடிய மீரா மிதுனை இன்று (ஆகஸ்ட்.26) காலை பெண் காவலர்கள் பாதுகாப்போடு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இரண்டு நாள்கள் போலீஸ் காவல் கேட்டு அரசு தரப்பு வழக்கறிஞர்களும், அதே போல் போலீஸ் காவல் வழங்கக்கூடாது என மீரா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டனர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட மேஜிஸ்திரேட் லட்சுமி, இன்று (ஆகஸ்ட்.26) மதியத்திற்கு தீர்ப்பினை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: ’மீரா மிதுனை கைது செய்தது பெருமைக்குரிய ஒன்று’ - சனம் ஷெட்டி

Last Updated : Aug 26, 2021, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.