சென்னை: தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியில் தனியார் நகைக்கடை திறப்பு விழா இன்று (ஜன.3) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், “நடிகர் சங்க கட்டடத்திற்கு நடிகர் விஜயகாந்த் பெயர் வைப்பது பொது கருத்தாக இருந்தால், அது தவறில்லை, அனைத்து நடிகர்களின் கருத்துதான் தனது கருத்து.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகை, நடிகர்கள் உதவியதை வெளியே சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, அது அவர்களது விருப்பம். அதேபோல தங்கம் வைரத்தில் பணத்தைக் கொண்டு செலவழிப்பதை விட, வெள்ளிப் பொருட்களில் செலவழித்தால், பிற்காலத்தில் ஒரு பெரிய அளவில் லாபத்தைக் காணலாம்.
வெப் சீரிஸால் சினிமாத்துறை பின்னோக்கிச் செல்கிறது என்ற தகவல் பொய்யானது, சினிமா எப்போதும் மங்கிப்போகாது” என்றார். இந்த ஆண்டு சிறப்பாக செல்வதற்கு அனைவருக்கும் பிரார்த்திப்பதாகவும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சத்யராஜ் உடன் இணையும் வெற்றி - பூஜையுடன் தொடங்கிய புதிய படம்!