ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவிற்கு நடிகர்கள், இயக்குநர்கள், எனப் பலரும் தங்களது ஆதங்கத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஷால் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அதில், “கருத்து சுதந்திரம் எங்கே? தணிக்கை வாரியம் ஏன் உள்ளது? எதற்கு இந்தப் பரபரப்பான செயல்கள்? ஏன் சினிமா துறையை குறிவைக்குறீர்கள்? முதலில் ஜிஎஸ்டி, பிறகு தனியுரிமைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் கிடையாது? தற்போது இந்தச் சட்டம். இதனை கொண்டுவருவது நியாமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் ஜெய்!