சென்னை: தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் சமீபத்தில் நடித்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இவர் நடித்த எனிமி, லத்தி ஆகிய படங்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் ஒரு வெற்றிப் படத்தை கொடுத்துவிட வேண்டிய கட்டாயத்தில் விஷால் இருக்கிறார்.
இந்த நிலையில் இவரின் அடுத்தப் படத்திற்கு அவர் செலக்ட் செய்த இயக்குநர் தான் ஆதிக் ரவிச்சந்திரன். ஆதிக் ரவிச்சந்திரன் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' என்ற படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான அந்த படம் அடல்ட் படமாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி (Mark Antony) என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில், ரிது வர்மா என ஏராளமான முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் நடித்தவர்களின் கெட்டப் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மார்க ஆண்டனி படத்தின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில், முன்னதாக விஷால் மற்றும் படக்குழுவினர் நடிகர் விஜய்யை சந்தித்து இந்த படத்திற்கான டீசரை காட்டி ஆசி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் டைம் டிராவல் குறித்த படமாக இருக்கும் என்பது டீஸரை பார்ப்பவர்களுக்கு தெளிவுபடுத்துகிறது. இப்படத்தின் மீது ரசிகர்களை தாண்டி நடிகர் விஷாலும் மிகப் பெரிய நம்பிக்கையை வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது இப்படத்தின் வெளியீடு குறித்த தகவலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதாவது இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று மார்க் ஆண்டனி திரைப்படம் திரைப்படங்களில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இப்படத்தில் விஷால் உள்பட பலரும் ரெட்ரோ லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தப்படத்தில் பலவிதமான தோற்றத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவலும் ரசிகர்களிடத்தில் இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெளியானது 'ஜெயிலர்' பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!