கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’களவாணி’. இந்தப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் நடித்த ஒவ்வொருவரும் தமிழ் சினிமாவில் தங்களுக்கென்று ஒரு முத்திரையைப் பதித்தனர். இத்திரைப்படம் கொடுத்த உற்சாகத்தில் இயக்குனர் சற்குணம், களவாணி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா ஆகிய இருவருமே ‘களவாணி 2’ திரைப்படத்தில் நடத்துள்ளனர்.
தற்போது ‘களவாணி 2’ முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில், ’தி புரபோசல்’ என்கிற ஆங்கிலப் படத்தின் ரீமேக்கில் நடிகர் விமல் நடிக்கவிருக்கிறார். இதில், நடிகை ஸ்ரேயா விமலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும், இத்திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயா கவர்ச்சியாகவும் நடிக்க இருக்கிறார் எனவும் திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
’தி புரபோசல்’ ஹாலிவுட் படத்தின் மலையாள ரீமேக்கில் திலீப் நடித்து 'மை பாஸ் ’ என்ற பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகி, சரிவர வெற்றிப் படங்களைக் கொடுக்காமல் நல்ல கதைக்காக காத்திருந்த விமல் இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.