ETV Bharat / state

விஜய் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் : அர்ஜுன் சம்பத்

தூத்துக்குடி : விஜய் உள்ளிட்டோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

arjun sampath, அர்ஜுன் சம்பத்
arjun sampath
author img

By

Published : Feb 7, 2020, 4:32 PM IST

இந்து மக்கள் கட்சியின் வணிகர் சங்கம் சார்பில் அதனுடைய ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "நேற்றைய தினம் (புதன்கிழமை) நடிகர் விஜய்யின் வீடு, அவருடைய தொழில் நிறுவனங்களில் வருமானவரித் துறை சோதனையிட்டு பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளனர். 150 கோடி ரூபாய்க்கும் மேல் அவர்கள் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் அவர் நடித்து வெளியான பிகில் திரைப்படம் சுமார் 400 கோடி ரூபாய்வரை வசூல் செய்திருக்கிறது. அந்த கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு வருமான வரியை செலுத்தாமல் அரசாங்கத்தை ஏமாற்றி இருக்கிறார்கள். விஜய் மட்டுமல்ல பனிமலர் கல்வி நிறுவனங்கள் தாளாளர், அவருடைய தகப்பனார், அவர்களுடைய மகள், அதாவது ஜேப்பியார் குடும்பத்தாரும் விஜய்யும் இணைந்து சினிமா தொழில் தயாரிப்பில் என பல்வேறு விதமான மோசடிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பு

ஆகவே வருமானவரித் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட நம்முடைய மத்திய அரசாங்கத்தின் துறைகள் விஜய் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். சினிமாவுக்குள் நிறைய கிறிஸ்துவ நிறுவனங்கள் ஊடுருவி, இந்து சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் படங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கின்றன. அவை தடுக்கப்படவேண்டும்.

தை பூசம், மகா சிவராத்திரி பண்டிகைகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அளிக்க வேண்டும். இந்தியாவில் அனைத்து தரப்பினரும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால், திமுக அதற்கு எதிர்ப்பு இருப்பதாகக் கூறி கோயபெல்ஸ் பிரசாரம் செய்து வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் இந்தியாவில் நடத்துவதற்காக திமுகவுக்கு, பாகிஸ்தானிலிருந்து நிதி உதவி வருகிறது. அதிலிருந்து வரக்கூடிய பணத்தை வைத்துத்தான் 380 கோடி ரூபாய்க்கு பிரசாந்த் கிஷோரை திமுக தேர்தல் வல்லுநராக ஒப்பந்தம் செய்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க : விஜய் பாடலால் கடுப்பான ரஜினி...

Intro:வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நடிகர் விஜய் உள்ளிட்டோரின் சொத்துக்களை வருமான வரித்துறை, அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்ய வேண்டும் - தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பந்த் பேட்டிBody:வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நடிகர் விஜய் உள்ளிட்டோரின் சொத்துக்களை வருமான வரித்துறை, அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்ய வேண்டும் - தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பந்த் பேட்டி

தூத்துக்குடி

இந்து மக்கள் கட்சியின் வணிகர் சங்கம் சார்பில் அதனுடைய ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், நேற்றைய தினம் நடிகர் விஜய் அவர்களுடைய வீடு மற்றும் அவருடைய தொழில் நிறுவனங்கள் இங்கே வருமான வரித்துறை சோதனையிட்டு பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 150 கோடி ரூபாய்க்கும் மேல் அவர்கள் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடித்து வெளியான பிகில் திரைப்படம் சுமார் 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறது அந்த கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு வருமான வரியை செலுத்தாமல் அரசாங்கத்தை ஏமாற்றி இருக்கிறார்கள். விஜய் மட்டுமல்ல பணிமலர் கல்வி நிறுவனங்கள் தாளாளர், அவருடைய தகப்பனார், அவர்களுடைய மகள், அதாவது ஜேப்பியார் குடும்பத்தாரும் விஜய்யும் இணைந்து சினிமா தொழில் தயாரிப்பில் அவர்கள் பல்வேறு விதமான மோசடிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

ஆகவே வருமான வரித்துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட நம்முடைய மத்திய அரசாங்கத்தின் துறைகள் விஜய் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். சினிமாவுக்குள் வந்து நிறைய கிறிஸ்துவ நிறுவனங்கள் ஊடுருவி, இந்து சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றன. அவை தடுக்கப்படவேண்டும்.

தைபூசம், மகாசிவராத்ரி பண்டிக்கைக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும். இந்தியாவில் அனைத்து தரப்பினரும் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் திமுக அதற்கு எதிர்ப்பு இருப்பதாக கூறி கோயபெல்ஸ் பிரசாரம் செய்து வருகிறது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் இந்தியாவில் நடத்துவதற்காக திமுகவுக்கு, பாகிஸ்தானிலிருந்து நிதி உதவி வருகிறது. அதிலிருந்து வரக்கூடிய பணத்தை வைத்துத்தான் 380 கோடி ரூபாய்க்கு பிரசாந் கிஷோரை திமுக தேர்தல் வல்லுனராக ஒப்பந்தம் செய்துள்ளது என்றார்.

பேட்டி : அர்ஜூன் சம்பந்த் - இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.