ETV Bharat / state

Actor vijay: நீண்ட நாட்களுக்கு பின் பெற்றோரை சந்தித்த நடிகர் விஜய் - புகைப்படம் வைரல்! - Actor Vijay Twitter

Vijay Meets Parents : Vijay Meet SAC and Sobha : அறுவை சிகிச்சை செய்து கொண்ட தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை நடிகர் விஜய் சந்தித்து நலம் விசாரித்தார். தந்தை மற்றும் தாயுடன் நடிகர் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay
Vijay
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 8:04 AM IST

சென்னை : அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரை நடிகர் விஜய் சந்தித்து நலம் விசாரித்தார். இதயத்தில் ஏறபட்ட பிரச்சினை காரணமாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த சில நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இது தொடர்பாக அவர் வீடியோவும் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய், தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரை அவரது வீட்டிற்கு சென்று நலம் விசாரித்து உள்ளார். அப்போது தந்தை எஸ்.ஏ.சி மற்றும் தாய் சோபாவுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள நடிகர் விஜய் அண்மையில் அமெரிக்கா சென்று அதற்கான போட்டோ ஷுட் பணிகளில் கலந்து கொண்டார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்து நடிகர் விஜய் சென்னை திரும்பினார். இந்நிலையில், தனது தந்தை மற்றும் தாய் ஆகியோரை நடிகர் விஜய் சந்தித்து உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் தாய், தந்தையுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம் வெளியான நிலையில், அதை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

நடிகர் விஜய், அவரது அப்பா எஸ்.ஏ.சி உடன் சண்டை போட்டு சில காலம் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்பட்டது. பட விழாவில் கூட நடிகர் விஜய் தனது அப்பாவை கண்டுகொள்ளாமல் சென்றதாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் வாரிசு படத்தில் அப்பா செண்டிமெண்ட் குறித்து பேசிய நடிகர் விஜய் நிஜ வாழ்க்கையில், தனது அப்பா, அம்மாவை ஒதுக்கி வைத்து இருப்பதாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

தற்போது இந்த கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் விஜய் தனது அப்பா, அம்மாவை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது இருப்பதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகின்றன. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்து உள்ளார்.

படபிடிப்புகள் ஏறத்தாழ முடிவடைந்த நிலையில், இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தை அக்டோபர் 19ஆம் தேதி திரையிட படக்குழு திட்டமிட்டு உள்ளது.

இதையும் படிங்க : சந்தோஷ் நாராயணனின் லைவ் இசைநிகழ்ச்சி... இலங்கையில் யாழ் கானம்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.