ETV Bharat / state

சென்னையில் களைகட்டிய 'மாவீரன்' ட்ரெய்லர் வெளியீட்டு விழா - சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன்

சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் களைகட்டிய மாவீரன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

author img

By

Published : Jul 2, 2023, 11:01 PM IST

சென்னை: குறுகிய காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் சிவகார்த்திகேயன். தனியார் தொலைகாட்சியில் தொகுப்பாளாராக தன் சினிமா பயனத்தை தொடங்கியவர் இன்று சினிமாவின் மூத்த கதாநடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.‌ இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்திற்காக உடல் எடையை கூட்டி வித்தியாசமான கெட்டப்பில் வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். அதுமட்டுமின்றி, 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமாரின் இயக்கத்தில் “அயலான்” என்ற படத்திலும் சிவகார்த்திகேயன் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் நீண்ட வருடங்களாக சிறப்பான முறையில் தயராகி வருகின்றது என படக்குழுவினர் அவ்வப்போது தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மண்டேலா படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மடோன் அஸ்வின் இயக்கத்தில் "மாவீரன்" படத்தில் நடித்து உள்ளார். தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற இயக்குநர் என்பதால், இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு பரத் சங்கர் இசை அமைத்துள்ளார். இந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி மாவீரன் படம் வெளியாகிறது. இந்த படமும் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று படகுழுவினரால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் இருந்து சீனா சீனா, வண்ணாரப்பேட்டையிலே ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாவீரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவீரன் படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரெய்லரை பார்க்கும் போது படம் வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாக ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தற்போது இந்த ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருவதுடன் ட்ரெண்டிங் டாப்பில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் ஃபேண்டஸி கலந்த கமர்ஷியல் படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுந்தபடி ட்ரெய்லரிலும் சில காட்சிகள் வருகின்றன.

பிரின்ஸ் பட தோல்வியால் துவண்டு போய் உள்ள சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் திரைப்படம் மீண்டும் புத்துயிர் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய எடிட்டர் பிலோமின் ராஜ், இப்படத்தில் சண்டைக் காட்சிகள் ஜாக்கி ஜான் படத்தில் வருவது போன்று ஃபேண்டஸியாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மேலும் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: தனுஷ் பாராட்டிய காடப்புறா கலைக்குழு ட்ரெய்லர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.