சென்னை: ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ரகுநாதாசார்யா என்ற ராம்சிங்ஹாசன் பாண்டே நேற்று (ஜன.2) இரவு 9:45 மணிக்கு காலமானார். இதுகுறித்து ரங்கராஜ் பாண்டே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், தனது தந்தை ரகுநாதாசார்யா என்ற ராம்சிங்ஹாசன் பாண்டே வைகுண்ட ஏகாதசியான நேற்று இரவு 9:45 மணிக்கு காலமானார். அன்னாரது காரியங்கள் சென்னையில் செவ்வாய் கிழமை நடைபெற இருக்கின்றன என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜன.3) ரங்கராஜ் பாண்டே வீட்டிற்கு நேரில் சென்று அவரின் தந்தை உடலுக்கு ரஜினிகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ரங்கராஜ் பாண்டே மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். ரங்கராஜ் பாண்டே தந்தையின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலியல் தொல்லைக்கு திமுக அரசு துணை போகிறதா? - ஓபிஎஸ் காட்டம்