ETV Bharat / state

உ.பி.முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடனான ரஜினி சந்திப்பின் பின்னணி - குழப்பத்தில் ரசிகர்கள்! - C P Radhakrishnan

Rajinikanth meets UP CM Yogi Adityanath: நடிகர் ரஜினிகாந்த் இமயமலையில் சென்று இறங்கிய பின்னர், உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என வரிசையாக அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். இந்த செயல் அவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

Rajinikanth
ரஜினிகாந்த்
author img

By

Published : Aug 20, 2023, 1:05 PM IST

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் ஓர் ஆளுமை ஆவார். அவரது ஒவ்வொரு அசைவும் தலைப்புச் செய்தியாக மாறும். அவரது நடிப்பு மற்றும் அரசியல் நகர்வுகள் அனைத்தும் பலராலும் உற்றுப் பார்க்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 4 தசாப்தங்களாக மக்களை மகிழ்வித்து வரும் காந்த சக்தி கொண்டவர் ரஜினிகாந்த். தனது திரை வாழ்வில் உச்சத்தில் இருந்த காலத்தில் இவர் பேச்சும் செயலும் ரசிகர்களை கவர்ந்து வந்தது. ஆனால் சமீப காலமாக இவரது நடவடிக்கைகள் ரசிகர்களை சங்கடப்பட வைத்து உள்ளது.

ரஜினிகாந்த் தனது திரை வாழ்வில் அஸ்தமனத்தில் இருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பேசி வருகின்றனர். அந்த அளவிற்கு அவரது படங்களும் சரி, அவரது நடவடிக்கைகளும் சரி திருப்திகரமாக இல்லை என்ற பேச்சும் அடிபடுகிறது. இந்நிலையில் தான் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றதோடு ரஜினி குறித்து எழுந்த அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

உலகம் முழுவதும் வசூல் வேட்டையாடிய இப்படம் தற்போது வரை ரூ.500 கோடி வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் இப்படமானது வெற்றிப் படமாக அமைந்தது உள்ளது. இதனால் ரஜினி உட்பட பலரும் மிகப் பெரிய மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனென்றால் முன்னதாக வெளியான தர்பார், அண்ணாத்த போன்ற படங்களின் தோல்வியால் துவண்டு போய் இருந்த ரஜினிக்கு எனர்ஜி ஏற்றியது இப்படம். ஆனால் அதன் பிறகு ரஜினியின் செயல்பாடுகள் அவரது ரசிகர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.

ரஜினிகாந்த் எப்போதுமே நேருக்கு நேர் பேசக்கூடியவர். தான் உச்சத்தில் இருந்த சமயத்தில் ஜெயலலிதா குறித்து காட்டமாக விமர்சித்தார். பாஜக குறித்தும் தனது நிலைப்பாட்டை பொதுவெளியில் தெரிவித்தார். ஆனால் தற்போது ரஜினிகாந்த் அதே பாஜகவினரை சந்தித்து வருகிறார்.

ரஜினி தனது ஒவ்வொரு படங்களின் வெளியீட்டின் போதும் இமயமலை செல்வது வாடிக்கை. கரோனா மற்றும் தனது உடல்நிலை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இமயமலை செல்வதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய தினம் இமயமலைக்கு புறப்பட்டார். ஜெயிலர் படம் வரலாற்று சாதனை படைத்து வரும் நிலையில், இவர் இமயமலையில் துறவி போல் சாமி தரிசனம் செய்து வந்தார். அதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்ற வண்ணம் உள்ளார். இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சென்ற இடங்களில் அவர் சந்தித்த நபர்கள் தான் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

ஜார்க்கண்ட் சென்ற ரஜினி, சின்னமாஸ்தா கோயிலில் வழிபாடு செய்தார். யசோதா ஆசிரமத்தில் ஒரு மணிநேரம் தியானம் செய்தார். இதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார். இதனையடுத்து ரஜினிகாந்த் உத்தர பிரதேச மாநிலத்திற்கு சென்றார். அங்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் சேர்ந்து ஜெயிலர் படம் பார்க்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா உடன் ஜெயிலர் படத்தைப் பார்த்தார்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், படம் பார்க்க வராதது சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் அலுவல் காரணமாக அவர் வரவில்லை என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை (ஆக்ஸ்ட் 19) நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா உடன் உத்தர பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். ரஜினிகாந்த்தை வரவேற்பதற்காக யோகி ஆதித்யநாத் வாசலில் நின்றிருந்தார். அவரை கண்டதும் ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்து வணங்கினார். இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமூக வலைத்தளங்களில் பலரும் ரஜினியின் இந்த செயலுக்கு மிகப் பெரிய எதிர்வினையாற்றி வருகின்றனர். ரஜினிகாந்த் காலில் விழுந்தது குறித்து அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிருப்தி தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும், ரஜினிகாந்த் அவரை விட 21 வயது குறைவானவர் காலில் விழுந்ததாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். திரையில் மட்டும் சமத்துவம் பேசும் ரஜினி நிஜத்தில் இப்படி செய்யலாமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதே சமயம் யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் ஆவதற்கு முன்னர் மடாதிபதியாக இருந்தவர். அதனால் மரியாதை செலுத்தும் விதமாக அவரது காலில் ரஜினிகாந்த் விழுந்ததாகக் கூறி, ரஜினியின் செயலுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

என்ன தான் சொன்னாலும் காலில் விழுவது விரும்பத்தக்க செயல் அல்ல என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருமுறை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ரஜினி தன் மீது காவி சாயம் பூசுவது ஒரு போதும் நடக்காது என்று சொன்னார். ஆனால் தற்போது இவரது செயல்பாடுகள் அதற்கு நேர்மாறாக இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். பின்னர் உ.பி.ஆளுநரை சந்தித்தார். பின்னர் உ‌.பி.முதலமைச்சர் யோகி உடன் படம் பார்க்க முயன்றார். அது நடக்காமல் போகவே இரவு வீட்டில் சென்று அவரை சந்தித்தார். தன்‌மீது காவிச் சாயம் பூச முடியாது என்று சொன்னவர் தற்போது பாஜகவினரை தேடி தேடி சந்தித்து வருகிறார். இதனால் ரஜினிக்கு பாஜக தரப்பில் இருந்து கவர்னர் பதவி கிடைக்கப் போவதாக செய்தி அடிபடுகிறது என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னவர் பின்னர் உடல்நிலையை காரணம் காட்டி அதில் இருந்து பின்வாங்கினார். இதனால் பல ஆண்டுகள் இதற்காக காத்துக் கொண்டு இருந்த அவரது ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்தது. சரி சினிமாவில் நல்ல படங்களில் நடித்து எங்களை மகிழ்வித்தால் போதும் என்று அவரது ரசிகர்கள் மனதை தேற்றி வந்தனர். ஆனால் இப்படி தேவையில்லாத வேலையை ரஜினிகாந்த் செய்து வருவது அவரது ரசிகர்களுக்கு தலைவலியை ஏற்படுத்துவதாக சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், ரஜினி உங்களது இறுதி காலத்தை அமைதியாகவும் நல்லமுறையிலும் அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்கி உங்களது பெயரையும் புகழையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அவரது ரசிகர்கள் தங்களது ஏமாற்றத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Nanguneri issue: அரசியல்வாதிகள் சாதியை விட்டு வெளியேற வேண்டும்; தமிழ்நாடு முதலமைச்சருக்கு பரிந்துரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.