ETV Bharat / state

'அவரால் வாழ்ந்தவர்கள் பலர்' - இயக்குநர் கே.பாலசந்தருக்கு ரஜினிகாந்த் புகழாரம்!

சென்னை: இயக்குநர் கே. பாலசந்தரின் 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் காணொலி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 9, 2020, 4:32 PM IST

actor-rajinikanth
actor-rajinikanth

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திரைத்துறையினர் பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து கே. பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான 'கவிதாலயா' மூலம் பல நட்சத்திரங்கள் வாழ்த்து செய்திகளை காணொலியாக வெளியிட்டு வருகின்றனர்.

அதன்படி நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்து செய்திக் காணொலியை வெளியிட்டுள்ளார். அதில் அவர், 'ஒரு நடிகனாக நான் பெயர், புகழ், நல்ல வசதியுடன் வாழ்ந்து வருவதற்குக் காரணம் இயக்குநர் கே.பாலசந்தர்.

ரஜினிகாந்த் பேசுகையில்

என்னை நடிகனிலிருந்து நட்சத்திரமாக்கியவர், பாலசந்தர். என் குறைகளை நீக்கி, எனது பலத்தை காண்பித்தவர் அவர். என் வாழ்வில் தாய், தந்தை, அண்ணா மற்றும் பாலசந்தர் ஆகியோர் எனக்கு தெய்வங்கள்" எனத் தெரிவித்தார். மேலும் நான் மட்டுமல்ல, அவரால் வாழ்ந்தவர்கள் பலர். பல நடிகர்களுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அழகின் அளவுகோலாக நிறம் இல்லை - அதிதி ராவ் ஹைதாரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.