இது தொடர்பாக பிரசன்னா தனது ட்விட்டர் பதிவில், "தமிழக மின் வாரியம் ஊரடங்கு காலத்தில் கொள்ளை அடிக்கிறது. இதனை உங்களில் எத்தனை பேர் உணர்ந்துள்ளீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
பிரசன்னாவின் இப்பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கின் போது மின் வாரியம் கொள்ளை அடிக்கிறது என அவர் பதிவிட்டிருப்பதற்கு பலரும் அவரின் ட்விட்டர் பதிவை டேக் செய்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிலர் பிரசன்னாவின் கருத்தை ஏற்காமல் மின் வாரியம் முறையாகத்தான் நடந்துகொள்கிறது என பதிவிட்டிருந்தாலும், அதிகப்படியானோர் பிரசன்னாவின் கருத்திற்கு ஆதரவாகவே பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
பிரசன்னாவின் இக்குற்றச்சாட்டு என்பது அவருக்கு நேர்ந்தவற்றை வைத்து செல்கிறாரா அல்லது ஒட்டுமொத்த பொதுமக்களிடமும் கொள்ளை அடிப்பதாகச் சொல்கிறாரா.., எந்த அடிப்படையில் இக்கருதை அவர் வெளியிட்டார் எனக் கேட்க அவரை தொடர்புகொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை.
தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளை அடிக்கிறது - நடிகர் பிரசன்னா - நடிகர் பிரசன்னா
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளை அடிக்கிறது என நடிகர் பிரசன்னா குற்றஞ்சாட்டியுள்ளார்.