ETV Bharat / state

நடிகர் சங்க அலுவலகம் பத்மநாபனிடம்  ஒப்படைக்கப்படும் - நாசர் பேட்டி!

சென்னை: நடிகர் சங்க தேர்தல் அதிகாரியாக நீதியரசர் பத்மநாபனை நியமிக்க சிறப்பு செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, இன்று நடிகர் சங்க அலுவலகம் அவரிடம் ஒப்படைக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும் நடிகருமான நாசர் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : May 15, 2019, 7:45 AM IST

நாசர் பேட்டி

2015 - 2018ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடைந்த நிலையில், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தியாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் உணவு விடுதியில் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விஷால், பூச்சி முருகன், மனோபாலா, ஸ்ரீமன், குட்டி பத்மினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் நாசர், "நீதியரசர் பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமிக்க சிறப்பு செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் இன்று நடிகர் சங்க அலுவலகம் நீதியரசர் பத்மநாபனிடம் ஒப்படைக்கப்படும். நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலில் என் தலைமையிலான அணியே போட்டியிடும். தேர்தல் நடத்த இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு நீதியரசர் பத்மநாபனிடம் அளிக்கப்படும். தேர்தல் நடத்தும் அதிகாரியாக அவர் செயல்படுவார்" என்றார்.

நாளை நடிகர் சங்க அலுவலகம் பத்மநாபனிடம்  ஒப்படைக்கப்படும் நடிகர் நாசர் பேட்டி.

2015 - 2018-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்று நிர்வாகத்தை கைப்பற்றியது.  இவர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடைந்த  நிலையில் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தியாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று மாலை சுமார் 7 மணி அளவில் சென்னையில் உள்ள தனியார் உணவு விடுதியில்  தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்விஷால், பூச்சி முருகன், மனோபாலா, ஸ்ரீமன், குட்டி பத்மினி உள்ளிட்டோர் இந்த கொண்டனர். 

இந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் நாசர்,

நீதியரசர் பத்மனாபனை  தேர்தல் அதிகாரியாக நியமிக்க 
சிறப்பு செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால்
நாளை நடிகர் சங்க அலுவலகம் நீதியரசர் பத்மநாபனிடம்  ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், நடைபெற உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலில்  தன் தலைமையிலான அணியே தேர்தலில் போட்டியிடும் என்றும் தேர்தல் நடத்த இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு நீதியரசர் பத்மநாபனிடம் அளிக்கப்படும் எனவும் தேர்தல் நடத்தப்படும் இடமும் தேதியும் நீதியரசர் அறிவிப்பார் .
தேர்தல் நடத்தும் அதிகாரியாக பத்மநாபன் செயல்படுவார் என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.