கரோனா விழிப்புணர்வு குறித்தும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கம் விலை குறித்தும் நாட்டில் நிறைவேற்றப்பட உள்ள சட்ட மசோதாக்கள் குறித்தும் நடிகர் மன்சூர் அலிகான் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்தப் பாடலின் இறுதியில் அவர் மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், தமிழனாக இந்தியனாக மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, மக்கள் வேலை இன்றி வருமானத்தை இழந்து எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலையில் எந்த சட்டமும், இஐஏ உட்பட எந்த சட்டமும் அமல்படுத்தக்கூடாது.
ஊரடங்கு என்றால் அனைவருக்கும் ஒன்றுதான். சட்டப்பேரவை, நாடாளுமன்றம் அனைத்தும் அதில் அடக்கமாக இருக்க வேண்டும். மக்களை அடிமைப்படுத்தி, எந்த சட்டங்களையும் இயற்ற முடியாது என்பது எனது வேண்டுகோள் என, அதில் அவர் தெரிவித்துள்ளார்.