தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணிக்காக பரப்புரை செய்யப்போவதாக நடிகர் கார்த்திக் அறிவித்துள்ளார். மேலும், பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் தன் தோழி குஷ்புவுக்காகவும் பரப்புரை செய்வேன் என்றார். அதற்கான தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் கார்த்திக் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு நெகடிவ் என வந்துள்ளது. மேலும், கார்த்திக் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ’’தீ இவன்’’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பள்ளியை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறையா? அறிக்கை கேட்கும் அரசு