சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தற்போது இந்தியன் 2 திரைப்படத்திலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் ஹைதராபாத் சென்ற கமல்ஹாசன், நேற்று (நவ 23) மாலையில் சென்னை திரும்பினார். அப்போது அவருக்கு லேசான சளி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கமல்ஹாசன் சிகிச்சை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "லேசான காய்ச்சல், சளி பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கடந்த முறை செய்த தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது - கமல் அட்வைஸ்