ETV Bharat / state

கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு எப்போது?... தேதியை அறிவித்த படக்குழு..! - கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக்

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வரும் 30ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக்
கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக்
author img

By

Published : Jun 27, 2023, 8:59 PM IST

Updated : Jun 28, 2023, 8:00 AM IST

சென்னை: 'ராக்கி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநராக அறியப்பட்டவர் அருண் மாதேஸ்வரன். படத்தின் கரு முற்றிலும் பழிவாங்குதலை பிரதானமாகக் கொண்டிருந்தாலும் அதனை வித்தியாசமான முறையில் வியக்கத்தக்க தெரிவித்திருந்தார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அந்த படத்தை தொடர்ந்து 'சாணி காயிதம்' என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னனி கதாபத்திரங்களில் நடித்திருந்தனர். இதுவும் வித்தியாசமான பழிவாங்கும் கதையாக அமைந்து இருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் அந்த படத்திற்கு 'கேப்டன் மில்லர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், தனுஷ் கதாநாயகனாகவும், பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில், பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தில் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத்தொடர்ச்சிமலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படம் 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்றுத் திரைப்படமாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் நீண்ட தலைமுடி வளர்த்துள்ளார். இந்த படம் ஜிவி பிரகாஷ் இசையில், மூன்று பாகங்களாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதுகுறித்து உறுதியான தகவல் இதுவரை வெளிவரவில்லை. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வரும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்த்து நிலவியுள்ளது. இந்த நிலையில் வரும் ஜூன் 30ஆம் தேதி கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த தகவல் தனுஷ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்று பின்னணி கொண்ட படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படத்தை இந்த ஆண்டே வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரலாம் என்றும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் 30ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Vijay controversy: புகையிலையும் புகார் அலையும்; மூச்சு முட்டும் தமிழ் சினிமா!

Last Updated : Jun 28, 2023, 8:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.